கம்யூனிச நபரின் லவ் ஜிஹாத்

கேரளாவில் சி.பி.ஐ (எம்) கட்சியின் கோழிக்கோடு பிரிவின் தலைவரும், டி.ஒய்.எப்.ஐ கண்ணோத் பகுதி செயலாளருமான ஷெஜின் என்ற முஸ்லிம் நபர், ஜோத்ஸ்னா மேரி ஜோசப்பின் என்ற ஒரு கிறிஸ்தவ பெண்ணுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர் மீது லவ் ஜிஹாத் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரின் இந்த செயலுக்கு ஆதரவளித்ததாக கட்சியின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. பெண்ணின் பெற்றோர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், ஷெஜின்  மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், அப்பெண்ணின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் காவல் நிலையத்துக்கு பேரணியாகச் சென்று  முற்றுகையிட்டனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், தன் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதாக ஜோத்ஸ்னா கூறியுள்ளார். ஆனால், ஜோத்ஸ்னா மறைமுக அழுத்தத்தின் பேரில் இதைச் சொன்னதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சி.பி.ஐ(எம்) மாவட்டச் செயலக உறுப்பினர் ஜார்ஜ் எம் தாமஸ் கூறுகையில், “முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையே மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததற்காக ஷெஜின் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளது. இருவருக்கும் சி.பி.ஐ (எம்) உதவியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை,” என்றார்.