கமல் ஆன ஆமிர்

ந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என்று சோல்வது இப்போது ஒரு ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்.   நீங்கள் எவ்வளவு நவீனமாக அல்லது முற்போக்காக இருக்கிறீர்கள் என்பதைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் அடையாளம். நவீனமானவராக இருந்தால், நீங்கள் நாடு உங்களுக்கு அளித்த விருதுகளை வீசியெறிய வேண்டும். நீங்கள் அதி நவீனமானவராக இருந்தால், ‘ஐயயோ, தாங்க முடியவில்லை, நாட்டை விட்டே நான் போகிறேன் சாமி,’ என்று அறிவிக்க வேண்டும். முன்பு, அவரது சோந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்த போது கமல்ஹாசன் தமிழ்நாட்டை விட்டுப் போவிடுகிறேன் என்று அறிவிப்புச் செதார். ஆனால் பட வெளியீடு பாதிக்கப்பட்டபோது, ‘மதவெறி கொண்ட மாநிலமாக’ இருந்த தமிழ்நாடு, அவரது வியாபாரத்திற்கான முட்டுக்கட்டைகள் நீங்கியதும், ‘பகுத்தறிவுப் பண்ணையாகி’ விட்டது. ஆழ்வார்பேட்டையே அவரது வாழ்விடமாயிற்று. இப்போது, ஆமிர்கானின் முறை. கரப்பான் பூச்சிகளைக் கண்டு கதிகலங்குகிற அதிவீர ஆமிர்கான்கள், அவர்கள் பாதுகாப்பானதாகக் கருதும் எங்கு வேண்டுமானாலும் போகட்டும். அது அவர் உரிமை. ஆனால், போகிற போக்கில்.. அவருக்கு இத்தனை நாள் வாழ்வளித்த இந்தியர்கள் மீது சேற்றை வாரிப் பூசிவிட்டுப் புறப்பட வேண்டாம். எவர் வீசிய சாபமோ? இல்லை.. எங்கள் தவறுகள் தானோ? page-14_pic_1இன்றைக்கு சின்னச் சின்னதாக சில பிணிகள் எங்கள் தாநாட்டைத் தொட்டுப் பார்க்கின்றன. என் அம்மா நோவாப்பட்டால், அதற்கு அவளே காரணமாக இருந்தால் கூட, அவளைக் காப்பாற்றக் கடைசிவரை போராடுவேன். காரணங்கள் ஏதோ சோல்லி, கைவிட்டு ஓடிவிட மாட்டேன். இந்த அசட்டுணர்வு ஆமிர் கான்களுக்குப் பொருந்துமா? அவர்கள் அறிவுஜீவிகள் அல்லவா? (தினமணியிலிருந்து)

மாலன், கௌரவ ஆசிரியர் புதிய தலைமுறை

 

சகிப்புத்தன்மைக்கு அடையாளமாக வாழும் தேசத்தில்…

மிர் அவர்களே, தங்களது பி.கே. படத்தில் பிரம்மா எங்கே? விஷ்ணு எங்கே? சிவன் எங்கே?” என்று தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி கடவுளைத் தேடிய நீங்கள், பிற மதத்தினர் வணங்கும் கடவுள்களை தேட போஸ்டர் ஒட்ட துணியாதது ஏனோ? பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ, இரானிலோ, ஈராக்கிலோ தாங்கள் இந்நாட்டில் சம்பாதித்ததுபோல ஒரு ஹிந்து, பெரிய நடிகராகி பல மில்லியன் டாலர்களை சேர்த்திருக்க முடியுமா? ஒருவேளை சகிப்புத்தன்மை இல்லை என்ற காரணத்திற்காக உமது குடும்பத்தோடு வேறு நாட்டிற்கு செல்ல நேர்ந்தால், அப்படி ஒரு நாட்டை எமக்கும் காண்பித்து அருள்வீராக! தெரியாமல்தான் கேட்கிறேன்! ஜனநாயக நாடு என்று தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி… போன்ற நாடுகளில் ஒரு முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் ஜனாதிபதியாகவோ, துணை ஜனாதிபதியாகவோ ஆக முடியுமா? அண்டை நாடுகளான பாகிஸ்தானிலோ, பங்களாதேஷத்திலோ அந்த தேசத்தின் மிகப் பெரிய கட்சியின் தலைவராக பல்லாண்டுகள் ஒரு கிறிஸ்தவர் பதவி வகிக்க முடியுமா? ஒரு கிறிஸ்தவர் அந்நாட்டின் ராணுவ மந்தி ஆக page-14_pic_2முடியுமா? கடந்த 65 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல கலவரங்களையும், வன்முறைகளையும், அதை தொடர்ந்து நடந்த பல்லாயிரக்கணக்கான படுகொலைகளையும் சகித்துக்கொண்டிருந்த தாங்கள், திடீரென்று சகிப்பின்மை பிரசாரத்தில் இறங்கியது ஏனோ? நடப்பது காங்கிரஸ் ஆட்சி இல்லை என்பதாலா? மோடி பிரதமர் ஆகிவிட்டார் என்பதாலா? அல்லது சகிப்புத்தன்மைக்கு அடையாளமாகவே வாழும் ஒரு தேசத்தை, சகிப்பின்மைக்கு இட்டுச் செல்லும் முயற்சியா?

– மதி (தினமணி கார்ட்டூனிஸ்ட்)