உத்தரகண்டில் வருடந்தோறும் விஷேஷமாக கொண்டாடப்படும் கன்வர் யாத்திரைக்கு, கொரோனா தொற்று பரவிவிடும் என்ற அச்சம் காரணமாக இவ்வருடம் அனுமதியை மறுத்துள்ளது அம்மாநில அரசு. ஆனால், அங்கு தினசரி கொரோனா தொற்று 48 என்ற அளவிலேயே உள்ளது. ஆனால், தினசரி நமது நாட்டின் கொரோனா பாதிப்பில் ஏறத்தாழ 30 சதவீதம் என்ற அளவுக்கு விபரீத பங்களிப்பு அளிக்கும் சிறிய மாநிலமான கேரளாவில் பக்ரீத்தை ஒட்டி, கொரோனா பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. கேரளாவில் தினசரி பாதிப்பு சுமார் 13,000 என்ற எண்ணிக்கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு ஜிகா வைரஸ் தொற்றும் பரவி வருகிறது. எனவே இந்த தளர்வுகளால் அங்கு கொரோனா தொற்றும் ஜிகா வைரஸ் பாதிப்பும் அதிகமாகலாம் என மருத்துவ வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருவிழா, குருத்தோலை ஞாயிறு, புனித வெள்ளி என எதற்கும் தளர்வு அளிக்காத கேரளாவை ஆளும் கம்யூனிச அரசு, முஸ்லிம்களை திருப்திபடுத்த இந்த தளர்வுகளை அறிவித்திருப்பதற்கு ஹிந்துக்களும் கிறிஸ்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.