ஊட்டியில் கந்த சஷ்டி கவசம் படங்களை, வீடு, கடைகளில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கந்த சஷ்டி கவச பாடல்களை, ‘கருப்பர் கூட்டம்’ என்ற அமைப்பினர் கொச்சைப்படுத்தினர்.
இதற்கு காரணமானவர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கந்த சஷ்டி கவசம் பிரபலமாகி வருகிறது.ஊட்டி, ‘இளையபாரதம்’ அமைப்பின் தலைவர் சரவணன் தலைமையில், நிர்வாகிகள், ஊட்டி நகரில் உள்ள, ஹிந்துக்கள் வீடு மற்றும் கடைகளில், கந்த சஷ்டி கவச விழிப்புணர்வு படங்களை ஒட்டி வருகின்றனர். இதை, பலரும் பாராட்டுகின்றனர்.இதேபோல, வீடுகளில் வேல் வரைந்து வழிபாடு செய்ய, பா.ஜ., மாநில தலைவர் முருகன் வலியுறுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பக்தர்கள் பலர், வீடுகளில் வேல் வரைந்து கோலமிட்டதுடன், கந்த சஷ்டியை பாராயணம் செய்தனர்.வடமதுரையில், பக்தர்கள் பலர், ஓவியர்களை வைத்து, வீடுகளில் வேல் வரைந்து வருகின்றனர்.