கண்ணன் வாழ்ந்து காட்டிய வழி

கார்கால மேகங்கள் சூழ்ந்த அமாவாசை நள்ளிரவின் கும்மிருட்டில் நடந்து செல்லும் ஒருவன் எங்கேனும் ஓர் ஒளிக் கீற்று தென்படாதா என்று ஏங்குவான்,

சித்திரை மாதத்து உச்சி வெயிலில் வறண்ட பாலைவனப் பகுதியில் நடந்து செல்லும் ஒருவன் நிழல் தரும் மரங்கள் உள்ள சாலை எப்போது வரும் என்று எதிர்பார்த்திருப்பான்.

அது போன்றே –

கொடுங்கோலனின் ஆட்சியின் கீழ் வாழ நேரும் மக்கள் அவனது கொடுமைகளிலிருந்து சமுதாயத்தை மீட்கும் வலிமைமிக்க நல்ல தலைவன் விரைவில் தோன்றமாட்டானா என்று ஏங்கித் தவிப்பதும் இயல்பே.

அவர்களது ஏக்கப் பெருமூச்சுகள், துயரப் பொருமல்கள் நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து வெளிவரும் பிரார்த்தனைகள் வீண் போவதில்லை.

ஆம்! கம்ஸனின் கொடுங்கோல் ஆட்சியில் இன்னலுற்ற ஆயிரக்கணக்கானோரின் இதயக் குமுறலின் எதிரொளியா பிறந்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்.

வாயிருந்தும் ஊமையா வாழ்ந்து வந்தோரின் உள்ளக்கிடக்கையை ஈடேற்ற வந்தான் வாசுதேவன்.

கம்சனின் உடனுறைந்தே கொல்ல வந்த அச்ச உணர்வின் வடிவாத் தோன்றினான் அந்த அச்சுதன்.

கொடுங்கோன்மை சர்வாதிகாரம் என்ற அந்தகார இருட்பேயை ஓட்ட வந்த ஒளிவிளக்கு கண்ணன்.

வெறும் சர்வாதிகார இருளைப் போக்க வந்த ஒளி மட்டுமல்ல அவன், அதர்ம இருள், தர்மத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவாக எழுந்த அறியாமை இருள் இவற்றை நீக்க வந்த ஞான தீபம் அவன்.

அவன் இருளில் தோன்றிய ஒளி, நள்ளிரவில் பிறந்த நாயகன்.

செல்வச் சிறப்போடு நந்தனின் செல்வ மகனாக வளர்ந்த போதும் ஆயர்குலத்து எளிய மக்களோடு அவர்களின் உற்ற தோழனாக அவன் வாழ்ந்து காட்டினான். அவர்களுக்கு நேரிட்ட துன்பங்களைத் தன் துன்பங்களாக நினைத்து அவன் அத்துன்பங்களிலிருந்து அவர்களை மீட்டான். யமுனா நதியை விஷ நதியாக மாற்றிய காளியனை வதம் செது சுற்றுச் சூழல் மாசு நீக்கி யமுனா நதியைத் தூய நதியாக மாற்றினான்.

இந்திரனை வழிபடுவதைவிட இயற்கையை வழிபடுவதே பொருத்தமானது என்று உபதேசித்து ஆயர் குலத்தோரை கோவர்த்தன பூஜை செய வைத்தான். கோவர்த்தன பூஜை இயற்கை வழிபாடு. மலைகளைப் பாதுகாப்பதே மரங்களைப் பாதுகாப்பதே மழை கிடைக்க ஒரே வழி என்பதைப் புலப்படுத்தினான்.

கல்வி கற்கச் சென்றபோது உடன் பயின்ற ஏழை மாணவன் சுதாமா பின்னாளில் இவனைத் தேடி வந்தபோது அவன் வா திறந்து வறுமையைப் போக்கு” என்று கேட்காமலேயே அவன் தேவையை அறிந்து செல்வத்தை வழங்கினான்.

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்.

கம்ஸனை மாத்தான்; அவன் தந்தை உக்ரஸேனரை ஆட்சியில் அமர்த்தினான்; ஜராஸந்தனை மாத்தான் அவன் மகனை அரியாசனத்தில் அமர்த்தினான்; சுசுபாலனை வதம் செதான்; அவனுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பில் அவன் மகனையே அமர வைத்தான். கொடுங்கோலர்களை வீழ்த்தி நல்லோரை ஆட்சிக்கு கொண்டுவருவதே தன் லக்ஷியம் என்பதை உணர்த்தினான். ராஜ்யங்களை கைப்பற்றும் சர்வாதிகார புத்தி, யதேச்சாதிகார புத்தி தனக்கு இல்லை என்று உண்மையான ஜனநாயகவாதியாக வாழ்ந்து காட்டினான்.

கௌரவர்கள், பாண்டவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்தபோதும் இறுதிவரை சமாதானத்திற்காக தூது போனான். ஆனால் அதர்மவாதிகள் அதைக் அவர்களை அழிக்கத் தயங்கவில்லை.

யுத்த நியதியையும் ஒழுக்க நியதியையும் தர்மத்திற்குத் துணை போகிறபோது மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் தர்மத்தை நிலைநாட்ட எது உதவுகிறதோ அதுவே சரியான யுத்த நியதி என்பதனை நமக்கு போதித்தான். இதனை நாம் புரிந்து கொள்ளாததால்தான் முஸ்லிம்கள் நம்மீது படையெடுத்தபோது நாம் அவர்களுக்கு அடி பணிய நேரிட்டது.

நரகாஸுரனை வதம் செத பின்னர் அவனால் பலாத்காரமாக கவர்ந்து செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்களை சிறை மீட்டதோடு மட்டுமல்லாமல், அவரவர் குடும்பத்தினர் அவர்களை ஏற்க அவர்களை தான் ஏற்றுக்கொண்டு மறுவாழ்வு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு சமுதாய அந்தஸ்தையும் தேடிக் கொடுத்தான்.

தேசப் பிரிவினையின் போது 1947ல் பல லட்சம் ஹிந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டபோது அவர்களது குடும்பத்தினர் அவர்களை ஏற்க மறுத்ததால் அந்தப் பெண்கள் முஸ்லிமாககளாக மாற வேண்டிய கொடுமை நேரிட்டது.

1983 முதல் யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களால் கற்பழிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களை அவர்கள் குடும்பங்கள் ஏற்க மறுத்ததால், அவர்கள் கிறிஸ்தவ அபலைப் பெண்கள் பாதுகாப்பு மையங்களில் சேர்ந்து – மதம் மாறினார்கள்.

இன்றைக்கும் சமுதாய நடைமுறை வாழ்வில் நமக்கு தர்ம அதர்ம குழப்பம் அதிகமிருக்கிறது. கண்ணன் பிறந்த தினத்தில் அவனது செயல்களை சரியாகப் புரிந்துகொண்டு அதன் வழி நடப்போமாக!