ஒரு பாரதப் புதல்வனின் இல்லறம், இன்னொரு பாரதப் புதல்வனின் துறவறம்!

பாரதியாரும் சுதந்திரப் போராட்ட காலத்தில் தனது பாடல்கள் மூலம் எழுச்சியை உண்டாக்கினார்.

ஒருநாள் பாரதியாரின் மனைவி செல்லம்மாள் ஏதோ கவலையில் இருந்ததைப் பார்த்த பாரதி, என்ன விஷயம்?” என்று கேட்கிறார்.

இன்று சமைக்க வீட்டில் கொஞ்ம் கூட அரிசி இல்லை” என்று கண் கலங்க செல்லம்மாள் கூறினார். கடகடவென்று சிரித்தார் பாரதியார். நீ திருமகள். உன் வாயில் இல்லை என்ற சொல்லே வரக்கூடாது. அதற்கு பதிலாக ‘அகரம் இகரம்’ என்று சொன்னாலே நான் புரிந்துகொள்வேன்” என்றார். அகரம் என்பது அரிசியின் முதலெழுத்து; இகரம் என்பது இல்லை என்பதன் முதலெழுத்து! வெளியே சிரிக்கும் பாரதியாரின் உள்ளமோ வெந்து கொண்டிருந்தது.

திருமகளைத் துதி பாடினார். இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்” என்பது அவரது பாடல்.

பாரதியார் காசியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று திரும்பும்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதையைக் காண கல்கத்தா சென்றார். அப்போது நிவேதிதா பாரதியாரிடம், மாநாட்டுக்கு உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா?” என்று கேட்டார். பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு மனைவியை உடன் அழைத்துச் செல்வது எங்களுக்குப் பழக்கமில்லை என்று பாரதி தெரிவித்தார்.

அப்போது நிவேதிதா, தேச விடுதலைக்காக போராடும் நீங்கள், உங்கள் மனைவியையும் உடன் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார். அன்னை நிவேதிதா இமயமலையிலிருந்து எடுத்து வந்திருந்த ஆலமர இலையை பாரதியாரிடம் கொடுத்தார். செல்லம்மாள் பாரதி தனது இறுதிக்காலம் வரை அதை பத்திரமாக வைத்திருந்தார்.

பாரதியாரின் இறுதிச் சடங்கிலே கலந்து கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே. உடலைத் தூக்கியவர்கள் நான்கு பேரும் பின்னால் சென்றது எட்டு பேர்களுமே! பாரதி என்று பிறந்தான், என்று மறைந்தான் என்பதைக் கூட மறந்த பாவிகளாகி விட்டோமே நாம்!

 

 

லகம் முழுவதும் உள்ள அனைத்து மதங்களின் பிரதிநிதிகளை வரச் சொல்லி அவரவர்களின் மதப் பெருமைகளைப் பேசச் சொன்னார்கள். மாநாட்டு முடிவில் உலகிலேயே தலைசிறந்த மதம் கிறிஸ்தவம்தான் என்று நிரூபிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்கள். அவர்களின் துரதிருஷ்டம், நமது அதிர்ஷ்டம், அந்த மாநாட்டுக்கு சுவாமி விவேகானந்தர் சென்று கலந்து கொண்டது.

சுவாமிஜி தனது உரையை அமெரிக்க நாட்டின் சகோதரிகளே, சகோதரர்களே” என்று கூறி துவக்கினார். அவ்வளவுதான். பார்வையாளர்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

நம்மில் பலர் சுவாமிஜி சகோதரிகளே, சகோதரர்களே என்று அழைத்ததால் அவருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது என்று பேசி வருகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை.

சுவாமிஜிக்கு முன்னும் பின்னும் பலர் சகோதரிகளே, சகோதரர்களே என்று அழைத்ததுண்டு. இதுபற்றி சுவாமிஜி கூறும்போது ஏதோ அதிசய ஆற்றல் என்னிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். என்னிடம் அத்தகைய ஆற்றல் உள்ளது. அது இதுதான் – ஒரு முறை கூட காம எண்ணம் என்னுள் புக நான் அனுமதித்ததில்லை.

என் மனம், எனது சிந்தனை, என் ஆற்றல்கள் அனைத்துமே ஓர் உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்தது” என்கிறார்.

அந்த இரண்டு வார்த்தைகள் கொடுத்ததல்ல… அதன் பின்னே இருந்த சுவாமிஜியின் தவசக்தி தான் காரணம்.

அமெரிக்க சர்வ சமய மாநாட்டிலே பல மதங்களைச்  சார்ந்த பிரதிநிதிகள் பேசினார்கள். 124 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட சிகாகோ சர்வ சமய மாநாடு என்றாலே உலகில் நினைவில் நிற்கிற ஒரே பெயர் சுவாமி விவேகானந்தர் மட்டுமே.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசும்போது அவருக்கு வயது 30. அப்போதுதான் முதல் முதலில் சுவாமி விவேகானந்தர் என்ற பெயர் உலகிற்கே அறிமுகமாகிறது.

 

 

 

செப்டம்பர் 11

* அமெரிக்கா சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் கர்ஜனை செய்த நாள்

* சுப்ரமணிய பாரதியின்  நினைவுநாள்

பாரதியாருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே வாழ்ந்தது 39 ஆண்டுகள் மட்டுமே.