ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கத்தில் ஜூலை 6 முதல் 9 வரை 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. ஆசிய கண்டத்தின் 45 நாடுகளிலிருந்து 700 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 42 விதமான போட்டிகளில் ஆண்கள், பெண்கள் முறையே 21 போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 95 வீரர்கள் கலந்து கொண்டனர். நடைபெற்றன. இப்போட்டியில் பாரதம் 12 தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கம் என 29 பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றது.
துப்பாக்கி சுடுதலில் மன்ப்ரீத் கௌர் பெண்கள் குண்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்றார். தமிழகத்தின் லட்சுமணன் முறையே 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கங்களை வென்றார். முகமது அனஸ் ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் நிர்மலா ஸ்ரேயா பெண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் தங்கம் வென்றனர். 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பெண்கள் பிரிவில் சித்ராவும் ஆண்கள் பிரிவில் அஜய் குமாரும் தங்கம் வென்றனர். பெண்கள் 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சுதா சிங் தங்கம் வென்றார். ஹெப்டத்லான் போட்டியில் ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்றார். 400 மீட்டர் ரிலே போட்டியில் ஆண்கள் அணியும் பெண் கள் அணியும் தங்கம் வென்று சாதனை புரிந்தனர். நீரஜ் சோர்டியா ஆண்கள் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். இந்தப் போட்டியில் வென்ற வீரர், வீராங்கனைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 முதல் 13 தேதி வரை லண்டனில் நடைபெறும் உலக தடகள போட்டியில் நேரடியாக பங்குபெறும் வாய்ப்பை பெறுகின்றனர்.
**********************************************************************************
பாரா ஒலிம்பிக்கில் தங்கம்
லண்டனில் 8வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உடல் ஊனமுற்றோருக்கான இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் 92 நாடுகளிலிருந்து 1074 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தடகளத்தில் ஈட்டி எறிதல் போட்டியில் பாரதத்தின் சுந்தர் சிங் குர்ஜர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 60.36 மீட்டர் தூரம் எறிந்து இப்பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையோடு உலக சாதனையும் இவர் வசமாகியது.
**********************************************************************************