ஒக்கி புயல் கன்யாகுமரியில் 2017 நவம்பர் 29 அன்று இரவே தன் ஆக்ரோஷத்தைக் காட்டத் தொடங்கியது. 1992ம் ஆண்டிற்குப்பின் வேகமான காற்றும் மழையும் மாவட்டம் முழுவதையும் உலுக்கியது. விளைவு சுமார் பத்து லட்சம் வாழை மரங்கள், ரப்பர் மரங்கள் வேரோடு சாந்தன. சுமார் ஒரு லட்சம் மரங்கள் ஒடிந்து விழுந்ததால் கிட்டத்தட்ட அனைத்து பிரதான சாலைகளும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கியது. புயலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கில் மின்கம்பங்கள் சாந்து மாவட்டமே இருளில் மூழ்கியது. பல மின்மாற்றிகள் நிலைகுலைந்தன. பத்து மனித உயிர்கள் பலியாயின.
ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேசவகர்கள் நவம்பர் 30 அதிகாலை முதலே பணியில் இறங்கினர். முதல்கட்டமாக சுமார் 100 ஆர்.எஸ்.எஸ் குழுக்கள் அந்தந்த பகுதி இளைஞர்களுடன் அணிசேர்ந்து நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடையின்றி நடைபெற வசதியாக சாலைகளில் விழுந்துகிடந்த மரங்கள் வெட்டி ஒதுக்கினார்கள். 2017 நவம்பர் 30 மாலைக்குள் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சரிசெயப்பட்டு, அடுத்த கட்டமாக இதர சாலைகளுக்கும் மீட்புப் பணி கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையில் சுசீந்திரம் பகுதியில் பழையாறு கரையைத் தொட்டு ஓடுவதாக செதி கிடைத்ததால் அனைவரது கவனமும் தாழ்வான பகுதியான சுசீந்திரத்தினை நோக்கி சென்றது. டிசம்பர் 1 அன்று அதிகாலை மூன்று மணிக்கு பழையாற்று வெள்ளம் சுசீந்திரம் பகுதியைச் சார்ந்த 21 கிராமங்களிலுள்ள சுமார் 4200 வீடுகளை விழுங்கியது. நாகர்கோவில் ஆர்.எஸ்.எஸ் காரியாலயத்திற்கு செதி கிடைத்த உடனேயே மாவட்டத்தின் எல்லா பகுதிக்கும் தகவல் பறந்தது. அந்த பகுதியைச்சார்ந்த ஸ்வயம்சேவகர்களுடன் நாகர்கோவில் நகர் ஸ்வயம்சேவகர்கள் இணைந்து இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்திருந்த பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை மீட்டு அந்தந்த பகுதிகளிலேயே பாதுப்பாக முதல்தளங்களில் தங்கவைத்தனர்.
மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்தடைந்த ஸ்வயம்சேவகர்கள் நாகர்கோவில் நகரத்தில் ஒரு திருமண மண்டபத்தில் ஒன்றுசேர்ந்து சமையல் வேலைக்கு தயாராகினர். அதிகாலை 5 மணிக்கு சமையலுக்கான பொருட்கள் பல கடைகளின் உரிமையாளர்களால் கடைகள் திறக்கப்பட்டு வழங்கப்பட்டன. உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு காலை 7.30 முதல் தண்ணீர் சூழ்ந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளில் சிக்கித் தவித்த அனைவருக்கும் வழங்கப்பட்டன. சில பகுதிகளுக்கு இப்பணியில் படகுகள் மூலம் மாடிகளில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டது.
பரப்புவிளை பகுதியில் முழுவதும் தண்ணீர் ஏறியதால் படகில் சென்று உணவு கொடுக்கலாம் என்று அங்கிருந்த தீயணைப்புத் துறையின் படகை கேட்டபோது எங்கள் மேல் அதிகாரி உத்தரவு இல்லாமல் தரமுடியாது என்று மறுத்து விடவே நம் ஸ்வயம்சேவகர்கள் கயிறுகளின் உதவியோடும் மதில் சுவர்களில் ஏறியும் சென்று உணவுப் பொட்டலங்களை வீடுகளுக்கு வழங்கினர்.
அத்துடன் குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் போன்றவைகளும் வழங்கப்பட்டன. மதிய உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டன. மருத்துவ குழு செயல்படத்தொடங்கியது. இரவு உணவும் வழங்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மெழுகுவர்த்திகளுடன் தீப்பெட்டிகளும் வினியோகிக்கப்பட்டன.
இந்த பேரிடர் நேரத்தில் பல இளைஞர்கள் வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். இவர்களுள் சிலர் ஸ்வயம்சேவகர்கள் பணியாற்றிய பாங்கினையும் கட்டுப்பாட்டையும் பார்த்தபின் இப்பணியில் தங்களை இணைத்துக்கொள்ள முன்வந்தனர். சமூக வலைதளங்கள் தலைப்புச் செதியாக இப்பணிகளை வெளியிட்டன. சமூக வலைதளங்கள் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று வெளியூரைச் சேர்ந்த சிலர் வங்கிக் கணக்கு எண் கேட்டு வாங்கி நன்கொடைகளும் வழங்கினர்.
அடுத்தநாள் பணிகள் விரிவாக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். ஒரே நாளில் நூற்றிற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு பல சிறிய பாதைகள் திறக்கப்பட்டன.
இப்பணியில் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் ஜெயசேகரன் மருந்துவமனை, நாகர்கோவில், பிபிகெ மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் அவர்களது மருத்துவமனை மருத்துவர்களை மருந்துகளுடன் அந்தந்த மருத்துவமனை வாகனங்களிலேயே அனுப்பி மருத்துவ முகாம்கள் நடத்தித்தந்தனர். சுமார் 350 நோயாளிகள் மருத்துவ உதவி பெற்றனர்.
அடுத்தகட்டமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்களுக்கு பத்து கிலோ அரிசி உட்பட சமையல் பொருட்கள் வழங்கவும் பா, பெட்ஷீட், துணிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவைகள் வழங்கவும் அணி அணியாக ஆர்.எஸ்.எஸ்ஸினர் ஊர் ஊராகா நிவாரணப் பணியில் முனைந்தார்கள். பொருட்களைக் கொடுத்து இப்பணியில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புவோர்களுக்கு வசதியாக அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அதன் விலாசம்:
ஒக்கி புயல் நிவாரண அலுவலகம்:
கணேஷ் நாகேந்திரா மில்ஸ் லிமிடெட்,
பார்வதிபுரம், நாகர்கோவில் – 629 003.
கன்யாகுமரி மாவட்டம்.
அலைபேசி எண்கள்: 9443608223, 9443163290, 9442170657
நன்கொடை அனுப்பி இப்பணியில் இணைய விரும்புபவர்களுக்காக வங்கிக் கணக்கு விவரம்:
Account Name:
SEVABHARATHI Then Tamilnadu Kanyakumari,
Indian Overseas bank,
Eraniel Branch,
IFS code IOBA00000226236
என்ற வங்கிக் கணக்கில் பணம் அனுப்பலாம்.