ஐயப்ப தீயாட்டு சிறப்பு பூஜை

ஹரிவராசன நூற்றண்டு விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில், ஐயப்ப தீயாட்டு சிறப்பு பூஜையும் குருசாமிகள் வந்தனமும் இன்று (19.02.2023) பூந்தமல்லியில் உள்ள பனியான் திருமன மண்டபத்தில் நடைபெற உள்ளது. காலை 05:30 மணி முதல் மாலை 06:30 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்விழாவில், சுவாமி மித்ரானந்தா, சுவாமி பிரம்ம யோகானந்தா, மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் நீதியரசர்கள் ஜெயச்சந்திர, வள்ளிநாயகம், முன்னாள் ஆளுநர் கும்மணம் ராஜசேகர், வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், திரைப்பட் இயக்குனர் பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.