ஐந்தாயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தின் பண்பாடே மதச்சார்பின்மைதான்!

பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக இருந்தபோது முதன்

முறையாக அவரை சந்திக்க இருந்தேன். அதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது. ஆனால் சந்திப்பு தேதி 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

மருத்துவமனையில் எட்டு நாட்கள் சிகிச்சை பெற்று அவர் திரும்பிய நிலையில் அனைத்து அப்பாயிண்ட்மெண்ட்களும் ரத்து செய்யப்பட்டன. எங்களது அப்பாயிண்ட்மெண்ட் ரத்து செய்யப்பட்டதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக போன் செய்தோம். ஏனெனில் அன்றைய தினம் டெல்லியில் எங்களுக்கு வேறு பணி இல்லை என்பதால், வேறு இடத்துக்கு செல்லலாம் என்று போன் செய்தபோது இதர அப்பாயிண்ட்மெண்ட்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டிருந்தன. எங்களது அப்பாயிண்ட்மெண்ட் மாத்திரம் ரத்து செய்யப்படாமல் அப்படியே வைக்கப்
பட்டிருந்தது. ஆகையால் நாங்கள் சென்றோம்.

அப்போது நாடாளுமன்றத்தில் தாய் மதம் திரும்புதல் (கர் வாபஸி ) தொடர்பாக பலத்த அமளி நடந்து கொண்டிருந்தது. நாங்கள் மிகவும் தயார்படுத்திக் கொண்டு சென்றோம். கேள்வி எழுப்பினால் பதில் கூற வேண்டுமே என்பதற்காக. இந்த உரைக்கான தயாரிப்புகளை விட அதிக குறிப்புகளை தயார் படுத்திக் கொண்டோம். ஆனால் நாங்கள் பதில் சொல்வதற்கான தேவையின்றி போனது.

தொடக்கத்தில் பிரணாப் அவர்கள் எங்களை சிறிது திட்டினார். ‘அட, என்ன ஆளுங்கய்யா நீங்க ? நாலு பேரை இங்கே (நம்ம மதத்துக்கு) திரும்ப அழைச்சுட்டு வந்தீங்க. அதனால் அமளி. பிரஸ் கான்பிரன்ஸ் கொடுத்திருக்கீங்க. கடந்த 300 வருஷமா மிஷனரி இதைச் செஞ்சிட்டிருக்கு, யாரோட காதுலயும்  இது விழல. ஆனா நீங்க ஒரே மூச்சா பிரஸ் கான்ஃபரன்ஸ் நடத்தி இருக்கீங்க. இப்போ விளைவைப் பாருங்க. எப்படிப்பட்ட அமளி நடக்குது. இதுதான் அரசியல். நானும் இப்ப, ஜனாதிபதியாக இல்லாமல், காங்கிரஸில் எம்.பி யாக இருந்திருந்தா நாடாளுமன்றத்தில், ‘எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன்’ என்றார்.

பின்னர் தன் குரலை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த அவர் ‘ஆனா, உங்க ஆட்கள் மூலமா ‘கர் வாபஸி’ நடைபெறாமல் போயிருந்தா,  தேசத்தோட முப்பது சதவீத பழங்குடியினர்,  நான் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டேன். மகிழ்ச்சியோடு, அவர்கள் எல்லாம் கிறிஸ்துவராகி இருப்பார்கள்
என்று சொல்ல வருகிறீர்கள் என்றேன்’. ஆனால் அவரோ, கிறிஸ்தவர்களாக அல்ல, தேச விரோதிகளாக மாறி இருப்பார்கள், என்றார்.

மதசார்பின்மை பற்றி நம் நாட்டுக்கு அமெரிக்கா அறிவுரை சொல்கிறது என்று அவர் கூறினார். அட,  உலகிலேயே நமது அரசியல் சாஸனம் தான் மிகவும் மதசார்பின்மை கொண்டது என்றார். பிறகு ஒரு நொடி அமைதியாக இருந்துவிட்டு, ஆனால் அரசியல் சாஸனம் உருவாக்கப்பட்டதில் இருந்துதான், நாம் மதசார்பற்றவர்கள் என்று அர்த்தமல்ல.

நமது அரசியல் சாஸனத்தை உருவாக்கியவர்கள் அனைவரும் மதசார்பற்ற மனப்பான்மை கொண்டவர்கள். அதனால் தான் அரசியல் சாஸனம் இப்படி உருவாக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

பின்னர் மீண்டும் ஒரு நொடி நிதானித்து விட்டு, ‘நம் நாட்டில் மதசார்பற்ற மனப்பான்மை கொண்ட முதலாவது நபர்கள் அவர்கள் அல்ல. 5 ஆயிரம் ஆண்டுகால நமது பாரம்பரியத்தின் பண்பாடே மதசார்பின்மைதான்,’ என்றார். 5 ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்த நமது மதச்சார்பற்ற பாரம்பரியம் எது ? அதனை முன்னே வைத்தால் உலகம் அதற்கு என்ன பெயர் வைக்கும்; ‘அதுதான் சனாதன தர்மம்’.

தற்காலச் சூழலில் ஹிந்துத்துவ தெளிவுரை புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் டாக்டர்  மோகன் பாகவத் கூறியதலிருந்து

தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்