ஏமாற்றினால் கடும் நடவடிக்கை

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோதுமை ஏற்றுமதியாளர்கள் ஒவ்வொருவரையும் சரிபார்ப்பதற்காக நாங்கள் விசாரித்து வருகிறோம், பின் தேதியிட்ட கடன் கடிதம் (LC) அல்லது பின்தேதியிடப்பட்ட விண்ணப்பங்களை உருவாக்க முயற்சிக்கும் எந்தவொரு ஏற்றுமதியாளர் மீதும் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். எங்களிடம் கோதுமைக்கான ஆதரவைக் கேட்ட நட்பு நாடுகள், அமைச்சகங்களுக்கு இடையே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. விவசாயம், உணவு, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். அந்த நாடுகளின் உண்மையான தேவைகளின் அடிப்படையில், அந்தக் குழு முடிவெடுத்து கோதுமை ஏற்றுமதியை அனுமதிக்கிறது. எந்த வெளிநாட்டு அரசு விண்ணப்பித்தாலும், குழு அதை ஆய்வு செய்யும். எங்களிடமிருந்து கோதுமையை விரும்பும் எந்த நாடும் அதனை தங்கள் நாட்டு மக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதை மறு ஏற்றுமதி செய்யக்கூடாது. வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கும் நமது நட்பு நாடுகளுக்கும் நாங்கள் ஆதரவளிக்க விரும்புகிறோம். உலகளவில் பாமாயில் விலை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. . உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள், செயலாளர்கள் குழு, மூன்று அடுக்கு அமைப்புகள் மூலம் தினசரி அடிப்படையில் சமையல் எண்ணெய் விலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனவே, பாரதத்தில், விலை உயர்வு கட்டுப்பாட்டில் உள்ளது” என்று கூறினார்.