ஹிந்து மதம் அதன் மரபு, கலாச்சாரம், பாரம்பரியம் குறித்த எம்,ஏ படிப்பை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் துவங்க உள்ளது. விரைவில் இதில், வேதங்கள், புராணங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களையும் ஹிந்து மதத்தின் பண்புகள் மற்றும் மரபுகளை அடிப்படையாகக் கொண்ட படிப்புகள் இடம் பெறும். பி.எச்.யு, ஜே.என்.யு, ஐ.ஐ.டி – கான்பூர் போன்ற புகழ்மிக்க பல்களைக்கழகத்தை சேர்ந்த அறிஞர்கள் இவற்றை கற்றுக்கொடுக்க முன்வந்துள்ளனர். ஹிந்து ஆய்வுகளில் புதிய இரண்டு ஆண்டு எம்.ஏ படிப்பு 2021-2022 ஆம் ஆண்டின் முதல் அமர்விலிருந்து தொடங்கும் என்று இறுதி செய்யப்பட்டுள்ளது. போலி சோஷலிச மத்திய மாநில அரசுகள், பல ஆண்டுகளாக ஹிந்துக்களின் கல்வி முறையை புறக்கணித்ததுடன், அரசு செலவில் மதரசாக்களையும் கிறிஸ்தவ பைபிள் கல்லூரிகளையும் ஆதரித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.