‘ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளது. இதனால், விவசாய விளை பொருட்களுக்கான எம்.எஸ்.பி எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் அளிப்பது குறித்து விவாதிக்க கமிட்டி அதன் பிறகு அமைக்கப்படும். இது குறித்து தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை மத்திய அரசு கோரியது. தேர்தல் ஆணையம், தேர்தல்கள் முடிவடைந்த பின் கமிட்டி அமைக்க பரிந்துரைத்துள்ளது என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.