கொங்கு மண்டல மகளிரை இழிவுபடுத்தும் ‘மாதொருபாகன்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு போன வாரம் சாஹித்ய அகாடமி விருது வழங்குவதாக இருந்தது; அந்த நிகழ்ச்சியை அகாடமி ரத்து செய்துவிட்டது. வீறு கொண்ட ஹிந்துகளுக்கு முதல்கட்ட வெற்றி! ஏற்கனவே மக்கள் போராட்டம் நடத்தியதால் இந்த புத்தகத்தின் ஆசிரியர், தான் எழுதியது கற்பனை என்று சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டார். அதனால் மக்கள் அமைதியாக இருக்கின்றனர். இப்போது இந்த விருது அறிவித்தது, திருச்செங்கோடு மக்களின் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விருது அறிவிப்பைக் கண்டித்து முன்னதாக திருச்செங்கோட்டில் அனைத்து ஆன்மிக அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது தங்களின் வேதனையை தெரிவித்தவர்களில் சிலரின் கருத்துக்கள்
சக்தி சிவனின் உடம்பில் சரிபாதியை பெற அக்னியில் 21 ஆயிரம் கோடிவருடம் தவம் புரிந்து சரிபாதி உடலை மஹாலய அமாவாசை அன்று பெறுகிறார். இந்த நிகழ்ச்சி இத்தலத்தைத் தவிர வேறு திருத்தலங்களில் இல்லை. இந்த நிகழ்வை கொச்சைபடுத்தும் விதமாக ‘மாதொருபாகன்’ புத்தகம் எழுதியுள்ளார் பெருமாள் முருகன். அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வைத்து அதை உலக மக்கள் திருச்செங்கோடு பெண்களை கேவலமாக நினைக்க வைக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் வெளியிடப்பட்டது. அதற்கு சாகித்தய அகாடமி விருது வழங்குவது எந்த விதத்திலும் நியாயமும் இல்லை. ஒரு சமுதாயத்தை கேவலப்படுத்தும் கதைகளுக்கு விருது வழங்கவும் கூடாது
– அ. கோபாலகிருஷ்ணன்.
ஒரு எழுத்தாளர் என்பவர் தன் பேனாவின் மூடியை திறப்பதற்கு முன்பு என்ன எழுதலாம் என்பதைவிட எதை எழுதக்கூடாது என யோசனை செய்யவேண்டும். ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் ஒரு சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு ஊன்றுகோலாக இருக்க வேண்டும். இதற்கு எதிர் மாறாக பெருமாள் முருகனின் நாவல்கள் கூட்டுக்குடும்பம், கலாச்சாரம் ஆகியவற்றை சிதைப்பனவாக உள்ளன. அவரது ஒரு நூல் வாங்க கெட்ட வார்த்தை பேசி பழகலாம்” ! இவர் ஓர் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்! ஆசிரியரின் லட்சணம் இப்படி என்றால் இவரது வழிகாட்டுதலால் வரும் மாணவர் சமுதாயம் எப்படி இருக்கும்?
– செந்தில்குமார்
பெற்ற தாயையும் விற்றுப் பிழைப்பு நடத்தும் எண்ணம் கொண்ட கும்பல்களின் வக்கிரமான படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவது அகாடமியை ஆக்கிரமித்துள்ள ஹிந்து விரோத, தேச விரோதிகளின் செயல். அகாடமியை ‘சுத்தம்’ செய்ய வேண்டும். விருது வழங்கக் கூடாது.
– சாவித்திரி
திருச்செங்கோட்டு பெண்களையும் நீண்டநாள் குழந்தை இல்லாமல் பல்வேறு வேண்டுதல்களுக்குப் பின் பிறந்த குழந்தைகளையும் கொச்சைப்படுத்துவதாக இந்த நூல் உள்ளது. படிக்கும் நாளைய தலைமுறை இதை உண்மை என்று நம்பினால் திருச்செங்கோட்டு நிலை என்ன? மஞ்சள் பத்திரிகைக்கு அனுமதி இல்லாத சூழ்நிலையில் எழுத்தாளர் தன் வக்கிரபுத்தியை கடவுள் பெயரை பயன்படுத்தி எழுதி தீர்த்துக்கொண்டுள்ளார். எழுத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. அது மற்றவர்களை பாதிக்காத வரை. எனவே, மாதொருபாகன் புத்தகத்தை தடைசெய்ய வேண்டும். அதேபோல் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலுக்கும் சாகித்ய அகாடமி விருது வழங்கக் கூடாது. அந்த ˆணஞு கச்ணூணா ஙிணிட்ஞுண நூலையும் தடை செய்ய வேண்டும் என்பதே மொத்த மக்களின் வேண்டுகோள்.
– சசிதேவி, வழக்கறிஞர்
திருவிழாவின் மாண்பை கொச்சைப்படுத்தும் வகையில் திருவிழாவில் கலந்து கொள்ளும் பெண்களின் கற்பை இழிவு படுத்தியும், சிறப்பு வாய்ந்த அர்த்தநாரீஸ்வரரை பற்றி கொச்சைப் படுத்தியும் திருச்செங்கோடு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் வெடித்த வேளையில், எழுத்தாளர் பெருமாள் முருகன் போராட்டத்திற்கு அடிபணிந்து மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு ஊரை விட்டுச் சென்று விட்டார்.
அப்படிப்பட்ட மாதொருபாகன் நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்த நூலை மொழி பெயர்த்தவருக்கு தற்போது சாகித்ய அகாடமி விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போலாகும்.
எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 23 அன்று திருச்செங்கோட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாநில அரசு உடனடியாக சர்ச்சைக்குரிய அந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும். மத்திய அரசு, சாகித்ய அகாடமி விருதை அந்த நூலின் மொழி பெயர்ப்பு எழுத்தாளருக்கு வழங்க இருப்பதை ரத்து செய்ய வேண்டும்.
– பொன் கோவிந்தராஜன்.