காட்சி 1: நாடகம் ஒன்றில் எஸ். வி. சேகருக்குக் கையில் காயம் பட்டிருக்கும். தன் மீது காதலி ரோஜாப் பூவை வீசியதால் தான் காயம் ஏற்பட்டது எனக் காரணம் கூறுவார்.
காட்சி ௨: சாணக்யா யூடியூப் சேனல் விதிகளை மீறியதால் முடக்கப்பட்டது எனச் சில ஊடகவியலாளர்கள் நடுநிலையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஹேக்கிங் என்று பாண்டே சொன்னதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
காட்சி 3: பாலக்காடு மாம்பரம் பகுதியில் பைக் மீது கார் மோதி தலையில் அடிப் பட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டர் மரணித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னைப் பதிப்பு செய்தி வெளியிட்டது. பாஜக தொண்டர் தலையில் 6 காயங்களும், உடலில் 30 காயங்களும் இருந்தைப் பின்குறிப்பாக எழுதியிருக்கிறார்கள்.
விளக்கம் 1: வலியுறுத்திக் கேட்ட நண்பருக்கு விளக்கம் கொடுப்பார் எஸ்.வீ.சேகர். ரோஜாப்பூ தொட்டியோடு பறந்து வந்ததால் தான் கை ஒடிந்தது என்பது முதலில் மறைக்கப் பட்ட உண்மை. நாடகத்தில் இது நகைச்சுவைக் காட்சி.
விளக்கம் 2: சேனலை நடத்தும் பாண்டே வழக்கம் போல உண்மையை விளம்பிக் கொண்டிருந்தார். விஷமிகளால் சாணக்யா குழும யூட்யூப் தளங்கள் ஊடுருவப் பட்டதும், அதனாலேயே அந்த சேனல் முடக்கப் பட்டதும் பிற ஊடகங்கள் மறைத்த உண்மை. சேனல் மீண்டு வந்தது. மீண்டும் முடங்கி, மீண்டும் மீண்டது. ஊடக உலகில் இது விறுவிறுப்புக் காட்சி.
விளக்கம் 3: அடையாளம் தெரிந்த சில விஷமிகள் அந்த 27 வயது ஆர்.எஸ்.எஸ் தொண்டரைக் காரால் மோதித் தள்ளி, மனைவியின் கண்ணெதிரேயே கத்தியால் குத்திப் படுகொலை செய்தனர். அதே டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கேரளப் பதிப்பு உண்மையை வெளிப்படுத்தியது. ஆனால் தமிழகப் பதிப்பு ஏனோ கங்கணம் கட்டிக் கொண்டு மறைத்ததோடு சாலை விபத்தில் மரணம் மட்டுமின்றி என்று தலைப்பிட்டது பத்திரிகை உலகில் இது பாழ்பட்டக் காட்சி.
கொலைக் களம்: பாலக்காடு ஜில்லா, மாம்பரம் பகுதி மண்டல் பௌதிக் ப்ரமுக் சஞ்ஜித். தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தவர். தாய், மனைவி, ஒரு வயது மகளுடன் வசித்து வந்தவர். சம்பவம் நடந்த நவம்பர் 15, 2021 காலை 9.30 மணியளவில் மனைவியை வேலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கம்யூனிஸம் அவர் விதியோடு விளையாடியது.
வெள்ளை நிற மாருதி கார் ஒன்று சஞ்ஜித்தின் பைக்கை இடித்துத் தள்ளியது. காரிலிருந்து இறங்கிய 4 பேரில் ஒருவன் சஞ்ஜித் மனைவி அர்ஷிதாவை இறுகப் பிடித்துக் கொண்டான். மீதமிருந்தவர்கள் சஞ்ஜித்தின் உடலில் எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் 50 தடவைக்கும் மேல் கத்தியால் குத்திக் கிழித்தனர்.
கேரள கம்யூனிச ஆட்சியாளர்களின் பேராதரவு பெற்ற தேசவிரோத எஸ்.டி.பி.ஐ வெறியர்களால் பாலக்காடு அருகே பட்டப் பகலில் பொது மக்கள், பயணிகள், பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த பள்ளிக் குழந்தைகள் எனப் பலர் பார்க்க நிகழ்த்தப்பட்ட இந்தக் கொலை வெறியாட்டத்திற்கு சஞ்ஜித்தின் மனைவி அர்ஷிகா மட்டுமே நேரில் பார்த்த சாட்சியாக இருக்கிறார்.
நீதி: இந்தக் கொலைகளையும், ஊடக அதர்மங்களையும் பார்த்துக்கொண்டு தர்ம தேவதையோடு நாமும் மௌன சாட்சிகளாய் மட்டுமே இருக்கப் போகிறாமா?