ஊடகங்களால் திரிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அறிக்கை

பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற ‘ஐடியாஸ் ஃபார் இந்தியா 2023’ உச்சிமாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் துணை பொதுச்செயலாளர் டாக்டர் கிருஷ்ண கோபால் கலந்துகொண்டு பேசுகையில், பாரதம் உபரியான கோதுமையை உற்பத்தி செய்கிறது என்றும், பாகிஸ்தான் அதனை கோரினால் மத்திய அரசு அதை பாகிஸ்தானுக்கு அனுப்பலாம். பாரதத்தின் நம்பிக்கையான “சர்வே பவந்து சுகினஹ:” (அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்) என்பதையும் கொரோனா தொற்றுநோய்களின் போது தேவைப்படும் நாடுகளுக்கு உணவு மற்றும் மருந்து உதவிகளை பாரதம் வழங்கியதை நினைவு கூர்ந்தார். பாகிஸ்தான் பாரதத்திடம் உதவி கேட்டால், மத்திய அரசு அதை பரிசீலிக்கும் என்று கூறிய அவர்,

அவர்கள், நாம் என்று கருதவில்லை. ‘சர்வே பவந்து சுகினஹ:’ என்பது நமது நாகரீக நம்பிக்கை. யாரும் எங்கும் பசியோடு இருக்கக்கூடாது. அது அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் கூட பொருந்தும். மேலும், பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொள்வது உண்மைதான், ஆனால் அது நம்மை அடிக்கடி தாக்குகிறது என்பதும் உண்மை தான். சரியான மனநிலையுடன் பாகிஸ்தான் உதவி கேட்டிருந்தால், பாரதம் நிச்சயமாக கோரிக்கையை பரிசீலித்திருக்கும் என கூறினார். ஆனால், சில ஊடகங்கள் இந்த அறிக்கையை ‘பாகிஸ்தானுக்கு பாரதம் கோதுமையை அனுப்ப வேண்டும்’ என திரிபுபடுத்தின.