மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ‘உலக மயமாக்கலில் இருந்து உள்ளூர் மயமாக்கல்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையை சர்வதேச பொருளாதார உறவு குறித்த ஆராய்ச்சிக்கான இந்திய குழுமம் இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு கூட்டமைப்புடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த அறிக்கையில், 2026ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்களை பாரதம் எப்படி உற்பத்தி செய்ய முடியும் என்பது குறித்தும் 120 பில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்யமுடியும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 2026ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக நமது உள்நாட்டு உற்பத்தி சூழலை வலுப்படுத்துவது குறித்து வலியுறுத்தி வருகிறது. சர்வதேச விநியோக அமைப்பில் நம்பத்தன்மை கொண்ட மற்றும் உண்மையான கூட்டாளியாக திகழ வேண்டும் என்பதே நமது நோக்கம்” என்று குறிப்பிட்டார்.