டெல்லியில் நடந்த சர்வதேச வர்த்தக கருத்தரங்கில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது குடியுரிமை சட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தேசிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்ததே நாட்டில் இருக்கும் அகதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக தான் எனக் கூறிய ஜெய்சங்கர், இந்த சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்தார்.
மேலும் குடிரியுரிமை திருத்தச்சட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட புரிதலும், கொள்கைகளும் உள்ளது. உலகில் உள்ள அனைத்து மக்களையும் ஏற்றுக்கொள்கிறோம் என கூறும் ஒரு நாட்டை காட்டுங்கள் பார்ப்போம். எந்த நாடும் அவ்வாறு கூறுவதில்லை என்று தெரிவித்தார்.
குடியுரிமை தொடர்பாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் நாடாளுமன்றத்தின் மூலம் சட்டம் இயற்றுகின்றன. அவ்வாறு இருக்கும்போது, குடியுரிமை தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு நமது நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை என எப்படி கூற முடியும் என்றும் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பினார்.