குடியரசு தினத்தையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அதன் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: நாம் வித்தியாசமாக தோன்றினாலும், பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் பாரம்பரியம் நம் நாட்டில் உள்ளது.
நாம் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்; அரசியலமைப்பின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். அப்போது தான் நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்லும்.
மக்கள் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும். தங்களது பொறுப்புகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்ற பாடுபட வேண்டும். இன்னும்சில ஆண்டுகளில் உலகிற்கே குருவாக நம் நாடு மாறுவதை காணலாம். இவ்வாறு அவர் பேசினார்.