உலகின் அறிவு மையம் பாரதம்

சண்டிகர் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த தூதரக ரீதியிலான மாநாட்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசினார். அப்போது, உலகின் அறிவு மையமாக திகழ்வதில் பாரதத்தின் வலிமை மற்றும் கொரோனாவுக்குப் பிறகான புதிய உலகில் பாரதத்தின் இடத்தை வடிவமைப்பதில் கல்வியின் பங்கு குறித்தும் பாரத கல்வி முறை லட்சியத்தை குறித்தும் உரையற்றினார். தேசிய கல்விக் கொள்கை 2020ன் மூலம் கொள்கை வடிவமைப்பை செயல்படுத்துதல், தரமான கல்வி நிறுவனங்கள், பல்முனை கலாச்சாரத்துடன் கூடிய சமூக உள்ளடக்கம் உள்ளிட்டவையும், புதுமை, தொழில்முனைவு மற்றும் சர்வதேசமயமாக்கல் ஆகியவற்றின் மீதான கவனமும் பாரதத்தின் கல்வி முறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றார். ‘வசுதைவ குடும்பகம்’ எனுன் பாரதத்தின் பழங்கால நம்பிக்கையைப் பற்றி குறிப்பிட்ட அவர், உலகளாவிய குடிமக்களை தயார்படுத்துவதற்கும், பொதுவான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் பொதுவான இலக்குகளை அடைவதற்கும் பொதுவான புரிதலுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அழைப்பு விடுத்தார். இம்மாநாட்டில் 120க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.