ஒரு புறம் பட்டினியால் வாடுவோர் உள்ளனர்.மறுபுறம் உணவை வீணடிப்பவர்களும் நிறைந்துள்ளனர்.இந்த முரண்பாடு காலங்காலமாக நீடித்து வருவது கவலையளிக்கிறது. ஒவ்வொரு உணவு பருக்கையிலும் விவசாயியின் வியர்வைத்துளி அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து கொண்டால் உணவை வீணடிக்கும் எண்ணம் அருகிவிடும்.
உணவு வீணடிப்பை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் இது பலரையும் முழுமையாக ஈர்க்கவில்லை என்பதையே அண்மையில் வெளியான புள்ளி விவரம் உணர்த்துகிறது.
2022ம் ஆண்டில் உலகம்முழுவதும்உற்பத்திசெய்யப்பட்டசுமார் 105 கோடிமெட்ரிக்டன்உணவு, யாருக்கும்பயனின்றிமுற்றிலுமாக வீணடிக்கப்பட்டுள்ளது.இது அந்த ஆண்டின் மொத்த உணவு உற்பத்தியில் 19 சதவீதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.ஏறத்தாழ 5ல் ஒருபங்குவீணடிக்கப்பட்டுள்ளது என்பதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
ஐ.நா.சுற்றுச்சூழல்திட்டப்பிரிவுஇதுபற்றியதரவுகளைவெளியிட்டுள்ளது.2019ம் ஆண்டில் 99.1 கோடிமெட்ரிக்டன்உணவுவீணடிக்கப்பட்டுள்ளது.இதுஅப்போதையஉணவுஉற்பத்தியில் 17 சதவீதம்ஆகும்.3 ஆண்டுகளில்உணவுவீணடிப்புஅதிகரித்துள்ளது, உறுத்தலைஉச்சப்படுத்திஉள்ளது.
உலகம்முழுவதும் 78.3 கோடிபேர்பட்டியினியால்பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்குஉணவைபகிர்ந்தளித்தால் வீணடிப்புப் பிரச்சினையும் தணிந்துவிடும்.பட்டினியும் அஸ்தமித்துவிடும்.இந்த இரண்டையும் ஒருபுள்ளியில் சங்கமிக்கவைக்க வேண்டும்.இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதுதான் உகந்த நடவடிக்கையாக இருக்க முடியும்