உறவுகளின் உன்னதத்தைப் பேணும் உத்தம மரபு ‘ஓரகத்திகள்’ ஓர் அற்புதமான சொல்

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரின் வீட்டுத் திருமண விசேஷத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்திருந்த ஒரு இளம் பெண்ணிடம், என்னை அந்தத் திருமணத்துக்கு அழைத்திருந்த அந்த நண்பர், அந்தப் பெண்ணுக்கு எந்த வகையில் உறவு என்பதை ‘ அவர் உனக்கு என்ன ஆக வேண்டும்?‘ என்று கேட்டேன். முதலில் அந்தப் பெண்ணுக்கு ‘ அவர் உனக்கு என்ன ஆவணும்?‘ என்ற பேச்சுமுறை வழக்கே புரியவில்லை.மிகுந்த சிரமப்பட்டு அவர் உனக்கு எந்த வகையில் சோந்தம் என்பதைத்தான் நான் கேட்பதை விளக்கினேன். அதற்கு அந்தப் பெண் ‘அவர் என் அங்கிள் ‘ என்றாள். நான் உடனே ‘அங்கிள் என்றால் சித்தப்பா அல்லது பெரியப்பாவா அல்லது மாமாவா?‘ என்றேன். அதற்கு அந்தப் பெண் சோன்ன பதில் தூக்கிவாரிப் போட்டது! ‘ சில சமயம் சித்தப்பான்னும் கூப்பிடுவேன், சில சமயம் மாமான்னும் கூப்பிடுவேன்’. அது எப்படி ஒரே நபரை ஒருவர் சில சமயம் சித்தப்பா சில சமயம் மாமா என்று அழைக்க முடியும். எங்கே போகிறது நம் இளைய தலைமுறை? யார் எந்த வகையில் என்ன உறவு முறையில் வருவார்கள்? எந்த உறவு நிலைகளில் என்னென்ன நியதிகள் பந்தங்கள் இருக்கின்றன? என்பதே புரியாமல் அங்கிள் , கசின் ( சித்தப்பன் மகன் , மாமன் மகன், அத்தை மகன் எல்லாம் ஒரே கண்றாவி கசின்தான் ) என்றே அழைத்துப் பழகும் இந்தத் தலைமுறை என்றுதான் நம் பாரத சமுதாயம் வகுத்து வைத்திருக்கும் உத்தமமான உறவுநிலை நியதிpage-27_pic_2களை அடையாளம் காணப் போகிறது?

தாதான் ஆதி உறவு. துறவறம் பூண்ட சந்நியாசியைக் கூட தா என்ற சிறப்பு நிலை விலக்காது.தந்தைக்கு அந்த நிலை இல்லை.துறவு மேற்கொண்ட சந்நியாசி எதிர் வரும்போது அந்தத் தந்தையே அவன் காலில் விழுந்து தொழுதுதான் ஆக வேண்டும்.ஆனால் தாக்கு அந்தக் கடமைப்பாடு இல்லை.

தா என்ற உறவு நிலைக்குத் துறவியும் விலக்கல்ல. அனைத்து உறவுகளும் அவள் மூலம் கிளைப்பதுதான். எனவேதான் ‘சகோதரன்-சகோதரி ‘ என்கிறோம். உதரம் என்றால் வயிறு. சக-உதரன். நான் எந்த வயிற்றில் பத்து மாதம் குடி இருந்தேனோ அதே தா வயிற்றில்தான் அவனும் குடியிருந்தான். சக-உதரி. எந்தத் தாயின் வயிற்றில் நான் சூல் கொண்டு வளர்ந்து இந்தப் பூமியில் பிறந்தேனோ அதே வயிறுதான் – உதரம்தான் – என் சக உதரியையும் சுமந்தது. தாயைக் ‘குடியிருந்த கோயில்’ என்றே போற்றுவது நம் மரபு. அவள் ‘மம்மி’ யோ ‘மாம்’ மோ இல்லை!

அப்படியானால் எல்லோரும் ‘சகோதரன்- சகோதரி’ ஆகிவிட முடியுமா? ஒரு வேளை என் தா என்னையும் என் சகோதரன் மற்றும் சகோதரியையும் நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே விட்டுவிட்டு இறந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். எங்கள் தகப்பனார் மறுமணம் செதுகொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண் எங்களுக்கு ‘மாற்றாந்தா’ ஆவாள். அதாவது இறந்து போன எங்கள் தாக்கு மாற்றாக வந்தவள்.

அப்போது அந்தப் பெண் எனக்கும் என் சகோதரன் மற்றும் சகோதரிக்கும் ‘மாற்றாந்தா‘ அல்ல – ‘சித்தி’அல்ல. அவள் எங்கள்‘சின்னம்மா‘. ‘சித்தி’க்கும் ‘சின்னம்மாவுக்கு‘மே இந்த நுட்பமான வேறுபாடு உண்டு. அதற்குப் பின் எங்கள் தகப்பனுக்கு அந்த இரண்டாம் மனைவி மூலம் பிறக்கும் குழந்தைகள் எங்களுக்கு ‘தம்பி‘ யாகவோ ‘தங்கை’யாகவோ ஆவார்கள் ஆனால் அவர்கள் ஒருபோதும் எனக்கோ அல்லது என் சகோதரன் மற்றும் சகோதரிக்கோ மற்றொரு ‘சகோதரன்’ அல்லது ‘சகோதரி’ ஆக மாட்டார்கள். ஏனென்றால் அவர்களும் நாங்களும் ஒரே தகப்பனின் உதிரத்தில் பிறந்தவர்களே தவிர தாயார்கள் வேறு வேறு! பெற்ற தந்தையின் உதிரம்தான் எங்களுக்குப் பொதுவே தவிர சுமந்த தாயின் உதரங்கள் வெவ்வேறானவை.

அடுத்த உறவு ‘அத்தை’ – அதாவது ‘ஆன்டி’ இல்லை. அத்தம் என்றால் கை. (சமஸ்கிருதத்தில் ஹஸ்தம்) – திருமணத்தில் கை பிடிப்பவன் ‘அத்தான்’, அவனைப் பெற்றவள் ‘அத்தை’! புரிகிறதா இளைஞர்களே நம் மரபு சார்ந்த ஆழமான அர்த்தமுள்ள உறவுச் சங்கிலி? அப்படியானால் திருமணத்துக்கு முன்பே தகப்பனுடன் உடன் பிறந்தாளை ஏன் அத்தை என்கிறோம்? என் தாக்கு அவள் என்ன உறவு? அதாவது என் தாக்கு அவள் ‘நாற்றி’ ஆகிறாள். (பேச்சு வழக்கில் ‘நாத்தி அல்லது மரியாதையாக ‘நாத்தனார்’). தன் கணவனின் உடன்பிறந்தாளை என் தா ‘நாற்றி’ என்கிறாளே ஏன்? அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தையை எங்கள் வீட்டு ஆண்மகன் கை பிடிக்கலாம் அல்லது அவளுடைய மகன்   எங்கள் வீட்டுப் பெண்ணை எதிர்காலத்தில் கை பிடிக்கலாம் , ஆக ‘அத்தம்’ பிடிக்கும் உறவு அமைய எதிர்காலத்தில் வாப்பு உள்ள சோந்தம் அது. எனவேதான் பிறந்தது முதலே அவள் எமக்கு ‘அத்தை’ ஆகிவிடுகிறாள். வம்சம் வளர அவள் நாற்றங்காலாக இருப்பதால் என் தா அவளை ‘நாற்றி’ என்கிறாள்!

இப்போது நாங்கள் நான்கு சகோதரர்களோ அல்லது மாற்றாந்தா முறையில் ஒரு சில அண்ணன் தம்பிகளோ இருக்கிறோம். எங்களுக்கு மனைவியராக வெவ்வேறு குடும்பங்களில் இருந்து எங்கள் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்துள்ள அந்த வெவ்வேறு பெண்கள் தங்களுக்குள் எப்படி உறவாகிறார்கள்? எப்படி ஒருவரை மற்றவர் குறிப்பிடுவார்கள்? ‘ஓரகத்திகள்’ – மிகவும் அர்த்தமுள்ள சோல்! ஆழ்ந்த புரிதல் உள்ள சோல்! ஓர் – அகத்திகள்! அகம் என்றால் வீடு. பெண்களே, நீங்கள் வெவ்வேறு குடும்பங்களில் இருந்து இந்த வீட்டுக்கு மருமகள்களாக வந்து சேர்ந்து இருக்கலாம் – ஆனால் இனிமேல் நீங்கள் எல்லோரும் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள்! குடும்ப ஒற்றுமையை ஆணிவேராக வலியுறுத்தும் அர்த்தமுள்ள சோல் ‘ஓர் அகத்திகள்’. பேச்சு வழக்கில் ‘ஓர்ப் படி‘ (படி என்றாலும் வீடு என்றொரு பொருள் உண்டு- படி தாண்டாப் பத்தினி)

மனை என்றால் காலி நிலத்தையும் குறிக்கும் – கட்டி முடிக்கப்பட்ட வீட்டையும் குறிக்கும். அதன் ‘உள்ளே’நாம் வசிப்பதால் ‘அகம்’. அதுவே வீட்டுக்கு ‘வெளியே’ கடைசியில் இருப்பதால் அது ‘புறக் கடை’. மனை என்பது வீடானதால் அதற்கு உரியவள் ‘மனைவி‘, அவள் ‘மிசஸ்’ இல்லை! இல்லம் என்பதும் வீட்டைக் குறிப்பதால் அதை ஆள்பவள் ‘இல்லாள்’. அகம் என்பதும் வீடானதால் அந்த அகத்துக்கு உடையவள் ‘அகம் உடையாள்’. அதாவது அகமுடையாள், பேச்சு வழக்கில் ‘ஆம்படையாள்’. அந்த அகத்துக்கு உரிய, சம பங்குப் பொறுப்பும் உரிமையும் உள்ள அவள் கணவன் ‘அகமுடையான்’ – பேச்சு வழக்கில் ‘ஆம்படையான்’.(ஹஸ்பண்டையும் சுருக்கி விளிக்கும் ஹப்பி அல்ல!)

உறவுகள் என்பவை வெறும் விளிச் சோற்கள் அல்ல. அவற்றை சோந்த பந்தங்கள் என்று குறிப்பிடுவது நம் பாரத மரபு. எல்லாச் சோந்தங்களிலும் ஒரு ‘பந்தம்’ இருந்துவிடாது. உதாரணமாக என் மைத்துனரின் மனைவிக்கு உடன் பிறந்த சகோதரனின் மாமனார் என்பவர் சுற்றி வளைத்து ஏதோ ஒரு வகையில் எனக்கும் உறவுதான். ஆனால் அதில் என்னைப் பிணைக்கும் ‘பந்தம்’ என்று எதுவும் இல்லை.ஆனால் தா மாமன் – இவன் என் அம்மாவின் உடன்பிறந்தான் ஆகையால் ‘அம்மான்’ என அழைக்கப்படுவான்- என்ற உறவு அப்படி இல்லை.திருமணத்தில் மாலை மாற்றும்போது உடன் நின்று தோளில் தூக்குபவன் அவன்தான். நானோ என் சகோதரியோ சிறு குழந்தையாக இருந்தபோது காது குத்தும் சடங்கில் மடியில் எங்களை அமர்த்திக் கொண்டவனும் அவன்தான். சிற்றப்பன் மடியில் அமர்த்தியபடி காது குத்த முடியாது. பெரியப்பன் மாலை எடுத்துத் தர மாலை மாற்ற முடியாது. தாலி கட்டுகையில் மூன்றாவது முடிச்சையோ, குடும்பப் பயிர் செழிக்க வேண்டும் என்பதன் அடையாளமாக மணப்பெண்ணின் சேலைத் தலைப்பை முடிச்சிட்டு அதில் புது நெல்லைக் கட்டுவிக்கும் சடங்கையோ ‘நாற்றி’ தான் செய வேண்டும். பெண்ணின் தாயார் அதைச் செய முடியாது. தகப்பனோ தாயோ இறந்தால் அந்த சாம்பல் நிறைந்த அஸ்தி கலசத்தை மகன்தான் ஏந்திச் சென்று கரைக்க வேண்டுமே தவிர அந்தப் பொறுப்பையும் கடமையையும் வேறு எவருக்கும் தாரை வார்க்க முடியாது.

உறவுகளின் உன்னதத்தைப் பேணும் நம் நாட்டின் உத்தம மரபை மீட்டெடுப்போம்.