உமங்கோட் நதி திருவிழா

உலகின் மிக தூய்மையான நதிகளில் ஒன்று. பாரதத்தின் மேகாலயா மாநிலத்தில் உள்ள உமங்கோட் நதி. ஷில்லாங்கிலிருந்து 100 கி.மீ தொலைவில் உமங்கோட் நதியின் தூய்மையால் அதில் செல்லும் படகு காற்றில் மிதப்பது போல தெரியும். இதன் புகைப்படத்தை சமீபத்தில் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டதால் மீண்டும் இந்த நதி உலக அளவில் பிரபலமானது. இந்நிலையில், மத்திய கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சகம், மேகாலயா அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை, செங் சாம்லா ஷ்னோங்ப்டெங் கலாச்சார மற்றும் விளையாட்டுக் கழகம் ஆகியவை இணைந்து முதல் முறையாக உமங்கோட் நதி திருவிழாவை நேற்று நடத்தியது. இத்திருவிழாவில் படகு மேஜை போட்டி, படகு சவாரி, வாட்டர் போலோ, ஜிப் லைனிங் போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, இப்பகுதியின் அழகைக் காண மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.