உண்மையான ‘ஞானம்’ என்பது என்ன?

பாரதத்திற்கு இன்றையத் தேவை பிருந்தாவன கிருஷ்ணனா? பகவத்கீதை உபதேசம் செய்த கிருஷ்ணனா?

– வி. குணசேகரன், மாடம்பாக்கம்

தர்மம் காக்க… அதர்மம் அகற்ற வில்லினை எடு” என்ற கீதை உபதேசம் செய்த கிருஷ்ணன்தான் இன்றையத் தேவை. அது சரி… பிருந்தாவன் கிருஷ்ணனும், கீதோபதேச கிருஷ்ணனும் ஒருவர்தானே…!

* vishnu

– சு. வேலுச்சாமி, தேவகோட்டை

நம்மிடம் ஏதுமில்லை” என்று நினைப்பது ஞானம். நம்மைத் தவிர ஏதுமில்லை” என்று நினைப்பது ஆணவம்.

காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் தொட்டு வழிபட முடிகிறது.  நம்மூரில்  அது  மாதிரி  இல்லையே  ஏன்?

– வாசவி முருகன், தாராபுரம்

நம்மூரில் தாராளமாகத் தொட்டுக் கும்பிடலாமே… ஆற்றங்கரை ஓரம் உள்ள பிள்ளையார், அரசமரத்தடி பிள்ளையாரைத் தொட்டுக் கும்பிட எந்தத் தடையும் இல்லையே! பெரிய பெரிய கோயில்களில் பாதுகாப்பாக இருக்கும்போதே சிலையைக் காணோம், நகையைக் காணோம் என செய்திகள் வருவதை நீங்கள் பார்க்கவில்லையா?

சிலர்  வெள்ளிக்கிழமை  நன்கொடை  கொடுக்கத்  தயங்குகிறார்களே  ஏன்?

– ராம. சாமிநாதன், கரூர்

மற்ற நாட்களிலாவது நன்கொடை தருகிறார்களே என்று சந்தோஷப்படுங்கள். அவர்கள் வெள்ளிக்கிழமை லக்ஷ்மி வரலாமே தவிர போகக்கூடாது என்று கருதுகிறார்கள். சிலர் குப்பைகளைக் கூட அன்று வெளியில் கொட்ட மாட்டார்கள்.