நியாய விலை கடைகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்கவும், சரியான அளவில் உணவு தானியங்கள் வழங்கவும் தானியங்கி இயந்திரம் மூலம் உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ஹரியானா அரசு முன்னெடுத்துள்ளது. இந்த திட்டம் ஐ.நா சபையின் ‘உலகளாவிய உணவு திட்டத்தின்’ கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை முயற்சியாக குருகிராமில் உள்ள ஃபாருக்நகர் நியாய விலைக் கடையில் ‘அன்னபூர்த்தி’ என்ற தானியங்கி உணவு தானிய ஏ.டி.எம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த உணவு தானிய இந்த ஏ.டி.எம் இயந்திரம் 7 நிமிடங்களில் 70 கிலோ வரையிலான தானியங்களை வழங்கும். வங்கி ஏடிஎம் முறையிலேயே செயல்படும். தானிய அளவுகளில் குளறுபடிகள் ஏற்படாது. தொடுதிரை, கைரேகை பதிவு வசதி இருப்பதால், பயனாளிகள் ஸ்மார்ட் கார்டு, ஆதார் எண் பதிவு மூலமாகவோ இந்த இயந்திரத்தில் உணவு தானியங்களைப் பெற முடியும்.