இறைவனே ஆனாலும், இரு!;- மகான்களின் வாழ்வில்

பண்டரிபுரம் எனும் தலத்தில் புண்டரீகன் என்பவன் தன் வயதான பெற்றோருக்கு ஆத்மார்த்தமாக பணிவிடை செய்து வந்தான். இதையறிந்த பரமாத்வான பண்டரிநாதன் அவனுக்கு அருள்புரிய அவன் இல்லத்துக்கே சென்றார்.

புண்டரீகனின் வீட்டின் வாசலுக்கு வெளியே இருந்தபடி பண்டரிநாதன், புண்டரீகா நீ உன் தாய், தந்தைக்கு செய்துவரும் சேவையைத் கண்டு மகிழ்ந்து உனக்கு தரிசனம் தர உன்னைத் தேடி வந்துள்ளேன்” என்றார். இறைவனின் குரலைக் கேட்டும் கூட,பிரபுவே! என்னால் இpandarinadhanப்போது எழுந்து வர இயலாது” என்று சொல்லி, ஒரு செங்கலை வெளியே தூக்கிப்போட்டு, இந்த கல்லின்மேல் இருங்கள்” என்றான்.

பகவான் மனம் பூரித்து, புண்டரீகா! நீபெற்றோர்களுக்குச் செய்யும் பணிவிடைகளைக் கண்டு உனக்கு நீகேட்கும் வரம் தர விரும்புகிறேன்” என்றார்.

சுவாமி! நீங்கள் இருந்த இடத்திலேயே இருந்து எல்லோருக்கும், எப்போதும் தரிசனம் தர வேண்டும்” என்று வேண்டினான். அதன்படி பாண்டுரங்கன் அங்கேயே எழுந்தருளினான்.

இன்று கூட பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் செங்கல் மீது நின்றபடி அருள் பாலித்து வருகிறார்.

தெய்வமே தன்னைத் தேடி வந்தபோதும்கூட தன் பெற்றோர்களுக்குச் செய்யும் பணிவிடைக்கே முதலிடம் கொடுத்த புண்டரீகன் நமக்கு உதாரணமாகட்டும்.

 

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்