கொரோனா பொதுமுடக்கத்தால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியாத சூழலில், இணையவழி கல்வி மட்டுமே வழி என்ற நிலையில், பஞ்சாபில் வசிக்கும் கணித ஆசிரியர் சஞ்சீவ் குமார் மாலை 4 மணி முதல் 7 மணிவரை தினமும் இரண்டு லேப்டாப், போர்டு, குறிப்புதவி புத்தகங்கள் சகிதமாக வகுப்பெடுக்க அமர்ந்துவிடுகிறார். இலவசமாகதானே எடுக்கிறோம் என இல்லாமல் முழு ஈடுபாட்டுடன் எடுக்கப்படும் இவரின் வகுப்புகள் நன்றாக இருப்பதால் தற்போது பஞ்சாப் மட்டுமின்றி மலேஷிய, ஐக்கிய அரபு நாடுகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இந்த வகுப்பில் தினமும் கலந்து கொள்கின்றனர்.
நானும் என் மனைவியும் ஆசிரியர்கள், கை நிறைய சம்பாதிக்கிறோம். எனவே இந்த இணையவழி வகுப்புக்கு ஜூம் செயலி, இணைய வசதிகளுக்காக மாதம் 20,000 செலவு செய்வது பெரிதாக தெரியவில்லை என்கிறார் சஞ்சீவ். இத்தகைய இணையவழி வகுப்புக்கு அதிக கட்டனம் வசூலிக்கும் சில தனியார் கல்வி நிறுவனங்கள் மீது இவருக்கு வருத்தமும் உண்டு. 9464387372 எண்ணில் வாட்ஸப்பில் மாணவர்கள் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயரை அனுப்ப வேண்டும். பாடம் தொடங்கும் முன் அதற்கான இணைப்பு அனுப்பப்பட்டு வகுப்புகள் தொடங்கும். இதை தவிர தேசிய திறனறி தேர்வுக்கும் வகுப்பெடுக்கிறார் இவர். இவரை போன்றவர்களை வாழ்த்தலாமே
இப்படியும் சிலர்
One thought on “இப்படியும் சிலர்”
Comments are closed.
Well & Good