இன்று இத்தாலி செல்கிறார் மோடி

ஜி7ன் தற்போதைய தலைவராக, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகள் உள்ளன. ஜி7 உறுப்பு நாடுகளின் உச்சிமாநாடு இத்தாலி நாட்டின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் இன்று (ஜூன்13) துவங்கி ஜூன்15ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜி7 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது.
மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இன்று (ஜூன் 13) இத்தாலி செல்கிறார். இம்மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் அதிபர் மற்றும் கனடா பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.