இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல்

இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஒரு நிகழ்வில் அவர் உரையாற்றுகையில், “ஜம்முவில் 43 இடங்களும், காஷ்மீரில் 47 இடங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படலாம். சமீபத்தில், ஜம்மு கஷ்மீரில் பல இலக்கு கொலைகள் நடைபெற்றன. இங்குள்ள சமூகக் கட்டமைப்பை உடைக்க எப்போதும் பயங்கரவாதிகள் முயன்று வருகின்றனர். அந்த பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் சில சக்திகள் இங்கு உள்ளன. சமீபகாலமாக இங்கு மீண்டும் வெறுப்பை மூட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு வெறுப்பு விதைகளை விதைத்ததில் நமது அண்டை நாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. 1947ல் நடந்த தாக்குதல்கள் முதல் சமீபத்தில் நடத்தப்பட்ட இலக்கு கொலைகள் வரை இவை அனைத்திற்கும் பின்னால் வெளிநாட்டு சதி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் இருந்து எந்த ஒரு சமூகமும் வலுக்கட்டாயமாக இடம்பெயர்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆயிரம் வெட்டுக்களால் பாரதத்தை ரத்தம் சிந்தவைக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆனால், நமது பாதுகாப்புப் படைகள் நம் நாட்டிற்கு பாதுகாப்புக் கவசமாக இருக்கின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்ஜிஸ்தானில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. ஆனால், அவை ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கமாக்கவில்லை’ என பேசினார்.