மன் கி பாத் நிகழ்சியில் பேசிய பிரதமர் மோடி லடாக்கில் இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட இடங்கள் மீது கண் வைத்தவர்களுக்கு பொருத்தமான பதிலடி அளிக்கப்பட்டதாக கூறினார். வீர மரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களின் தியாகத்தை குறிப்பிட்டு, இந்திய நாட்டின் மீது அன்னியர் கை வைக்க முடியாது என்பதை அவர்கள் நிரூபித்து காட்டி விட்டதாக தெரிவித்தார் . அவர்களின் வீரமே இந்தியாவின் பலமாக உள்ளதாக அவர் வர்ணித்த பிரதமர், நாடு வீரர்களுக்கும், வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலை வணங்குவதாக குறிப்பிட்டார் . நல்ல அண்டை நாடாக இருக்க தெரிந்த இந்தியாவுக்கு மற்றவர்களுக்கு உரிய பதிலடியை கொடுக்கவும் தெரியும் என்றார் மோடி. சீனப் பொருட்களை புறக்கணிப்பது என்று தீர்மானித்ததன் மூலம் சீனாவுக்கு பொருளாதாரப் பின்னடைவையும் இந்திய மக்கள் ஏற்படுத்தி உள்ளனர் என கூறினார்.