இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வைத்து இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க அழுத்தம் கொடுத்து வருகிறது. பயங்கரவாதத்தை தனது முக்கிய கொள்கையாக பாகிஸ்தான் வைத்துள்ளது. ஆனால், பாகிஸ்தானின் இத்தகைய விளையாட்டை நாம் விளையாடாமல் அதனை பொருத்தமற்றதாக ஆக்கிவிட்டோம்.
அண்டை நாடுகளை நாம் மாற்ற முடியாது. ஆனால், அவர்கள் முன்வைக்கும் பயங்கரவாத அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். நம்மை மிரட்டுவதற்காக பயங்கரவாதத்தை சட்டப்பூர்வமானது மற்றும் பயனுள்ளது என அவர்கள் நிர்ணயித்த விதிமுறைகளின் கீழ் பாகிஸ்தானை நாங்கள் கையாள மாட்டோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.