ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை 2018-ல் பதியப்பட்ட ஒரு வழக்கை காரணம் காட்டி நேற்று விடியற்காலையில் ஏதோ பயங்கரவாதியை பிடித்து செல்வது போல கைது செய்து இழுத்துச் சென்றுள்ளது மகாராஷ்டிர காவல்துறை.
ஆனால் அந்த வழக்கின் மற்ற முக்கிய குற்றவாளிகளான ஃபெரோஸ் ஷேக், நித்தேஷ் சர்தா கைது பற்றி எவ்வித தகவலும் இல்லை.
சார்பு நிலை நிறைந்துள்ள ஊடகத்துறையில், நடுநிலையோடு இருப்பவர்கள் அரிது. தான் வேலை செய்த ஊடகங்களிலும், துவங்கிய தொலைகாட்சியிலும் நேர்மையாக செயல்படுபவர் அர்னாப். தேசபக்தி இல்லாதவர்களை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றிய இவரது துணிச்சல் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் உண்மைகள் வெளிவர முயற்சித்தவர் அர்னாப். இந்த வழக்கை உளவு அமைப்புகள் விசாரித்தபோது கிணறு வெட்ட கிளம்பிய பூதமாக, போதைபொருள் கடத்தல், கான்களின் ராஜ்ஜியம், அரசியல் தலையீடு, பாகிஸ்தான் கைவரிசை என ஒவ்வொன்றாக வெளிவந்தது. பால்கரில் சாதுக்கள் கொல்லப்பட்ட வழக்கும் ரிபப்ளிக் தொலைக்காட்சியால் வெளியுலகிற்கு தெரிந்தது.
இவை அனைத்தும் மகாராஷ்டிராவில், சிவசேனா காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு தொல்லையை கொடுத்ததால் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கயாகவே எண்ணத் தோன்றுகிறது. எமர்ஜென்ஸி காலத்தில் இந்திராகாந்தி தனக்கு எதிரான ஊடகங்களை நசுக்கி ஊடக சுதந்திரத்தை பறித்தார்.
தற்போது அதே காங்கிரசால் ஆட்டுவிக்கப்படும் சிவசேனாவின் இந்த நடவடிக்கையும் எமர்ஜென்ஸியை நினைவுபடுத்துகிறது.
அர்னாப் கோஸ்வாமியின் மீதான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.