தேசத்தின் 75வது சுதந்திர தினம் மற்றும் அரவிந்தரின் 150வது பிறந்த தின கொண்டாட்டத்தையொட்டி ‘பாரத் சக்தி பாண்டி லிட் பெஸ்ட் 2022’ விழா புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “நாடு முழுவதும் நாட்டின் 75வது சுதந்திர அமுதப்பெருவிழாவை சிறப்பாக கொண்டாட பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் செய்த தியாகங்கள் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. ஆன்மிக பூமியாக புதுச்சேரி திகழ்கிறது. இங்கே ஆன்மிக எழுச்சி மூலம் தலைவர்கள் சுதந்திர தாகத்தை ஊட்டினர். அரவிந்தரின் ஆன்மிக சேவை குறித்து பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். தமிழகம் வரலாற்று தியாகங்களை புரிந்த தலைவர்களைக் கொண்டுள்ளது. இளம் தலைமுறையினர் தியாகிகளின் வரலாறுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்சிராணி போன்றோர் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும் சுதந்திரத்துக்குப் பாடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதுபோன்ற சுதந்திர வீரர்களை தெரிந்து கொண்டு, மரியாதை செலுத்துகிறது. தமிழகம் ஆன்மிக பூமி. இங்கு 4 லட்சம் கோயில்கள் இருக்கின்றன. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் தேவையின்றி அரசியல்வாதிகள் தலையிட்டு அந்த கோயில்களின் வரலாற்றை சிதைக்கின்றனர். பாரதமே ஆன்மிக பூமியாக திகழ்கிறது” என்று கூறினார். அவர்களை நினைவு கூர்ந்து கொண்டாடுகிறது. திருவள்ளுவர் கூறியிருப்பதைப் போல், நாட்டை வழி நடத்தும் நல்ல நிர்வாகத்தை வழங்கி பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.