ஹிந்து வாழ்க்கை முறையில் திருமணங்கள் என்பவை இரு மனங்கள் இணைவதோடு நிற்பவை மட்டுமல்ல, இரண்டு குடும்பங்கள் இணைவதன் துவக்கம் என்று வழக்கமாக நாம் சொல்வது உண்டு. இந்த பெண்மணி கல்பனாஅபேயின் மண வாழ்வு இன்னும் பல படிகள் தாண்டி இரண்டு தேசங்களின் நல்லுற்அவு விரிவடைவதற்கும் ஆழப்படுவதற்கு காரணமாக ஆகியிருக்கிறது.
கல்பனா சிங்கப்பூரில் பிறந்தவர். அவர் தந்தை தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். பிரபல தொழிலதிபர் கல்பனா அமெரிக்காவில் மேல் படிப்பு படித்து, ஜப்பானின் பிரபல பெயின்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர்.
அமெரிக்காவில் படிக்கையில் இஸாவோ அபே என்ற ஜப்பானியருடன் காதல் மலர்ந்துள்ளது. பலமுறை முயன்று இருவீட்டார் சம்மதத்துடன் கல்பனா – இஸாவோ மணம் புரிந்து கடந்த 20 ஆண்டுகளாக நிறைவான தம்பதியராக வாழ்க்கை நடத்துகின்றனர்.
குடும்பத்திற்கு வெளியேயும் ஜப்பானில் சமூக அங்கீகாரம் உடனடியாக கிடைக்கவில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல, கணவனின் ஆதரவில் உடன் பழகிய ஜப்பானியர்களும் புரிந்து கொள்ளத் துவங்கினர். கல்பனா பாரதத்தின் கலாச்சார வழிமுறைகளையும் விட்டுவிடாமல் கணவரின் குடும்பத்தின் பாரம்பரியத்தையும் தெளிவாக புரிந்துகொண்டு கடைபிடித்து வருகிறார். பாரதத்தின் ஹிந்து வாழ்க்கை முறையின் பண்புகளை, சமஸ்காரங்களை பெருமிதத்துடன் எண்ணுகிறேன்; அவற்றை கடைபிடிப்பதில் சமரசத்துக்கு இடமில்லை” என்கிறார். இந்த தம்பதியினருக்கு இறைவன் அளித்துள்ள மூன்று பரிசுகள் – ஹியுன்ஸி நாராயண் என்ற மகன், ஹிதோமி வித்யா, ஹிரோமி பாக்யா என்ற புதல்விகள். அதெல்லாம் சரி, இதில் நம் நாட்டிற்கு என்ன நன்மை என்கிறீர்களா? மேலே படியுங்கள்.
கல்பனாவின் கணவர் இஸோவோ அபே ஜப்பான் பிரதமர் ஹின்ஸோ அபேயின் தந்தை வழி உறவினர். கல்பனா அதற்காக செல்லுமிடமெல்லாம் தன் அரசியல் தொடர்புகளை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.
அதே சமயம் கல்பனா – இஸாவோ தம்பதி அமைதியாக பாரத – ஜப்பானிய நல்லுறவு விரிவடைய தொடர்ந்து இயன்ற வழிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இயல்பாகவே ஜப்பானியருக்கு பாரத நாட்டின் மேல் நன்மதிப்பு உண்டு. சமீப காலங்களில் குறிப்பாக, நரேந்திர மோடி அரசின் முயற்சிகளில் ஜப்பான் அரசு, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பாரத நாட்டிற்குத்தான் ராஜரீக முக்கியத்துவம் அளிக்கிறது.
இஸாவோ – கல்பனா தம்பதியினர் டிசம்பர் மாதத்தில் டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய – ஜப்பானிய கூட்டுறவு உச்சி மாநாட்டினை நடத்துவதில் தீவிர பங்கு ஆற்றி வருகின்றனர். இவர்கள் இயற்கையோடு இணைந்த வளர்ச்சி – Sustainable development என்ற அடிப்படையில் அமைந்துள்ள பொருளாதாரத் திட்டங்களின் மேல் முழு கவனத்தை செலுத்து வருகின்றனர். இவர்கள் பாரத – ஜப்பான் கூட்டுறவு மூலம் நம்நாடு மட்டுமல்ல, ஆப்பிரிக்க தேசத்தில் பல நாடுகளும் பயன்பெற முடியும் என்கிறார்கள். அந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஹிந்து தமிழ்ப் பெண் ‘வசுதைவ குடும்பகம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றுதானே நினைப்பாள்!