ஆஸ்திரேலியாவில் பார்லிமென்ட் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி வருண் கோஷ் பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்றார். ஆஸ்திரேலியா பார்லிமென்டின் மேற்கு ஆஸ்திரேலியா தொகுதி எம்.பி.,யாக இருந்த பாட்ரிக் டாட்சென், உடல் நலக்குறைவால் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இத்தொகுதிக்கு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்தியா வம்சாவளி வருண் கோஷ் தேர்வு செய்யப்பட்டார்.
வழக்கறிஞரான வருண் கோஷ், 1980ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். தொழிலாளர் கட்சி உறுப்பினராக இருந்து வந்துள்ளார். முதன்முதலாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எம்.பி.,யாகி உள்ளார். இந்திய வம்சாவளி வருண் கோஷ் பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து எம்.பி.,யாக பதவி ஏற்றார். வருண் கோஷை ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் வரவேற்ற பின், தொழிலாளர் செனட் குழுவில், நீங்கள் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது” எனக் கூறினார்.