ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பகவத் மற்றும் அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே ஆகியோர் அகில பாரதிய பிரதிநிதி சபாவின் (ஏபிபிஎஸ்) மூன்று நாள் வருடாந்திர கூட்டத்தை பாரத மாதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி தொடங்கி வைத்தனர். நாடு முழுவதும் உள்ள 34 ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த 1,474 பிரதிநிதிகள் ஏபிபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றனர், இது நேற்று நிறைவடைந்தது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத இணை பொதுச் செயலாளர் டாக்டர் மன்மோகன் வைத்யா, சங்கம் உருவாகி 100 ஆண்டுகள் நிறைவடையும் 2025-ம் ஆண்டு ஒரு லட்சம் ஷாகாவாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவிட் நோய்தொற்றின் போது ஆர்.எஸ்.எஸ்ஸின் பணி மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றது. நோய்தொற்றின் போது 5.5 லட்சத்திற்கும் அதிகமான ஸ்வயம்சேவகர்கள் மக்களுக்கு சேவை செய்தனர். 109 இடங்களில் நடைபெறும் சங்க ஷிக்ஷா வர்காவில் (பண்பு பயிற்சி முகாம்கள்) 20,000 ஸ்வயம்சேவகர்கள் பங்கேற்பார்கள் என்றார். வழக்கமான பிரச்சாரகர்கள் மற்றும் விஸ்தாரக்களைத் தவிர 1,300 கூடுதல் சதாப்தி விஸ்தாரக்களும் நூற்றாண்டு ஆண்டில் சங்க பணி, செயல்பாடுகளை விரிவுபடுத்த 2 ஆண்டு பணியை மேற்கொண்டுள்ளனர். பாரதத்தின் ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்று, அனைவரும் சமம், அனைவரும் எனக்குச் சொந்தமானவர்கள், சமுதாயத்திற்கு நான் ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் உன்னத சிந்தனைகளை, மதிப்புகளை ஷாகாகளில் இருந்து வெளிவரச் செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தார். ஸ்வயம்சேவகர்கள் சேவைப் பணிகளூக்கு தங்கள் நேரத்தை ஒதுக்கி, சொந்தப் பணத்தை செலவழித்து சமூக மாற்றத்திற்குப் பங்களிக்கிறார்கள் என்பது அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை காட்டுகிறது. ஷாகா வருவதன் மூலம் நல்ல குணநலன் வளற்கிறது. ஷாகாகளில் கலந்துகொள்ளும் நபர்கள் சிறந்த கருத்துகளை உள்வாங்குகிறார்கள். தேசிய சிந்தனைகள் எழுப்புவதன் மூலம் சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இது பகவான் மகாவீரின் 2550வது நிர்வாண ஆண்டு, ஆர்ய சமாஜ நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த 200 ம் ஆண்டு, சிவாஜி மகாராஜின் முடிசூட்டு விழாவின் 350 ஆண்டு.பாரத சுதந்திரத்திற்கான அமிர்த காலத்தை மனதில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, என்றார்.