ஆன்மீக பயணத்திற்காக கன்னியாகுமரிக்கு வந்திறங்கினார் மோடி

மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை (1.6.2024) நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணிநேரத்துக்கு தியானம் மேற்கொள்கிறார்.

கணியாகுமாரிக்கு வந்த பிரதமர்  புகழ்பெற்ற ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் வழிபட்ட பின்னர் விவேகானந்த மண்டபதிற்கு சென்று  தியானத்தைத் தொடங்கினார் மோடி. 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம், 1892 ஆம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் மூன்று நாட்கள் தியானம் செய்த இடமாகும்.

 

தியானம் சனிக்கிழமை மதியம் வரை தொடரும். அங்கு தங்கியிருக்கும் போது, ​​விவேகானந்தர் நினைவிடம் அருகே அமைந்துள்ள   திருவள்ளுவரின் 133 அடி   சிலையையும் மோடி பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.