ஆன்மிகம் என்ற ஒற்றைப்புள்ளி

பாரத நுண்கலைகள் குறித்த 3 நாள் சர்வதேச மாநாடு சென்னை ஐ.ஐ.டியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தொடங்கியது.தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய அவர், பாரதத்தின் எதிர்காலமாக திகழ்பவர்கள் இளைஞர்கள்.அவர்கள் நம் நாட்டின் ஆன்மிகம், கலாச்சாரம், பண்பாஅட்டின் சிறப்புகளை அறிந்து கொள்ள ஆசிரியர்கள் வழிசெய்ய வேண்டும்.நமது கலாச்சாரங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அனைத்துமே ஆன்மிகம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைகின்றன.ஆன்மிகம், கலை, கலாச்சாரம் ஆகிய கருத்துகளால் நிரம்பியது நமது அரசியலமைப்பு.நமது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை எனும் சொல்லுக்கு தவறான புரிதல் உள்ளது.அந்த ஆங்கில வார்த்தைக்கான ஐரோப்பிய அர்த்தத்தையே இன்று வரை பின்பற்றி வருகிறோம்.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாம் பயணிக்கும்போது இந்த நாடே பூஜைகளாலும் மந்திரங்களாலும் நிரம்பியிருப்பதை நம்மால் உணர முடியும்.மக்களுக்கான அடிப்படை உரிமைகளை எடுத்துரைக்கும் ராம ராஜ்ஜிய கருத்துகள் அரசியலமைப்பில் அடங்கியுள்ளன.அதை மக்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ளவில்லை.மாணவர்களுக்கு ஆன்மிகம் இல்லாத அரசியலமைப்பு கற்றுத் தரப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.இந்த நிலை மாற வேண்டும்.மேற்கத்திய நாடுகள் அடக்குமுறைகளாலும், வன்முறைகளால்ம் உருவானவை.ஆனால், நமது தேசம் அப்படியல்ல. நமது பாரதம் பக்தியால் உருவானது.நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க அனைவரும் முன்வர வேண்டும்” என கூறினார்.