கொரோனாவை உலகிற்கு வழங்கி, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி, ஒட்டுமொத்த உலக நாடுகளின் வெறுப்பை சம்பாதித்துள்ளது சீனா.
உலக சுகாதார அமைப்பின் முக்கியஸ்தர்களை சரிகட்டி, உண்மையை மறைத்தது சீனா என அமெரிக்கா குற்றம் சாட்டியது.
தற்போது உலகில் பத்தில் ஒருவருக்கு கொரோனா தாக்கம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவ காரணமான சீனாவின் ஊஹானில், ஆராய்ச்சி நிலையங்களில் உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து விசாரணையை துவக்குகிறது உலக சுகாதார அமைப்பு.
குழுவினர் பெயரையும் அறிவித்துவிட்டது. விசாரணை குழுவினர் எப்படியும் உண்மையை கண்டறிந்து விடுவார்கள் என சீன அரசு பயத்தில் உறைந்துள்ளது.