தமிழகத்தை 49 வருடங்களாக ஆட்சி செயும் திராவிட இயக்கத்தினால், தமிழகம் முன்னேறவில்லை. திராவிட இயக்கத்தினரின் குடும்பங்களே முன்னேற்றம் கண்டிருக்கின்றன. திராவிட இயக்கத்தின் இரண்டாம் தலைமுறையினரின் ஆதிக்கம் பெருகும் விதமாகவே ஆட்சி நடைபெற்றது. இதற்கு மாற்றாக, தமிழகத்திலும் தேசிய சிந்தனை கால் ஊன்ற வேண்டும். தேசிய சிந்தனை கொண்ட கட்சி என்றால் அது பாரதிய ஜனதா கட்சி மட்டுமே. தேசிய கட்சிகளின் அடையாளங்களை மட்டும் வைத்துக் கொண்டு, தேசவிரோத சக்திகளுக்கு ஊக்கம் கொடுக்கின்ற காங்கிரஸையும் கம்யூனிஸ்ட்களையும் புறக்கணிக்கும் விதமாக, இந்த தேர்தல் அமைய வேண்டும். வரும் சட்டமன்றத் பாரதிய ஜனதா கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களான குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, கோவா உள்ளிட்ட மாநிலங்களின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். அந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை போல் தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும்.
ஊழலற்ற ஆட்சி, விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பது, ஏழ்மை நிலையில் உள்ளவர்களை மேம்படுத்துவது, மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்குவது, பெண்களின் நிலைப்பாட்டை உயர்த்துவது, தனியாரிடம் கிடைக்கும் தரமான கல்வியை, அரசு மூலம், அனைவருக்கும் கொடுக்கும் விதமான திட்டங்கள், போன்றவற்றினால், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் முன்னேறுகின்றன. அப்படிப்பட்ட முன்னேற்றம் தமிழகத்திலும் வர, பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
குஜராத் அரசு 90 மீட்டர் உயரமுள்ள நர்மதா அணையின் உயரத்தை, 121.9 மீட்டர் உயர்த்தியதின் காரணமாக, 24 மணி நேரமும் விவசாயத்திற்குத் தண்ணீர் கிடைக்க வழி வகை செயப்பட்டது. மழை காலங்களில் பெயும் மழை நீரை சேமிக்கும் விதமாக 87,179 மீட்டர் தடுப்பணைகள் கட்டப்பட்டன. மாநிலத்தில் உள்ள குளங்கள் கணக்கிடப்பட்டு, அவை மழை நீரைச் சேமிக்கும் விதமாக சுமார் 1,30,262 குளங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தில் உள்ள 39,202 ஏரிகள் இருப்பதாக கணக்கு மட்டுமே உள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை விடுவிக்கக் கூட இந்த அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை. ஏரி, குளங்களை ஆக்கிரமித்த கழகக் கண்மணிகளுக்கு ஆதரவாக சட்டம் திருத்தப்பட்டது. தமிழகத்தில், ஆண்டுதோறும் பெய்யும் மழை அளவு 322 மி.மீ. மற்றும் 470 மி.மீ என கணக்கிட்டாலும், இந்த நீரை சேமித்து வைக்ககூடிய வகையில் எந்த திட்டமும் கடந்த ஐம்பதாண்டு காலமாக கழகங்களின் ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. ஆகவே, தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இந்த முயற்சி மேற்கொள்ள முடியாது. எனவே, தமிழக வாக்காளர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இதுவே.
விவசாய உற்பத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மத்திய பிரதேச அரசு ‘கிருஷி கர்மண்’ விருது பெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் ஆட்சியின் போது விவசாய உற்பத்தியின் வளர்ச்சி வெறும் 3 அல்லது 4 சதவீதத்திற்கு மேல் உயர்வு பெற்றது கிடையாது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியிலே, தற்போது விவசாய உற்பத்தியின் அளவு 24.99 சதவீதம் என்பதை பார்க்கும் போது, மாநிலத்தின் வளர்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த குஜராத், இன்று மின் மிகை மாநிலமாக மாறி, உபரி மின்சாரத்தை 12 மாநிலங்களுக்கு விநியோகம் செகிறது. மத்தியத் தொகுப்பிலிருந்து வெறும் 870 மொகவாட் மின்சாரம் மட்டுமே மத்திய பிரதேசத்திற்கு கிடைத்து வந்த நிலையில் 6,000 மொகாவாட் மின் உற்பத்திக்கு திட்டம் வகுத்து அதைத் திறம்படச் செயல்படுத்தியதின் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் 24 மணி நேரம் தங்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது.
கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சியில் இருந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 1 மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய முயலவில்லை. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா என்பதையும் கவனிக்க வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தேவையா? அல்லது சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிட்டுவிட்டு, அதைக் கிடப்பில் போடும் அரசு தேவையா?
தமிழகத்தில், பொது விநியோக திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் சோல்லி மாளாது. ரேஷன் கடை ஊழியர்கள் தற்கொலை செது கொள்ளும் அளவிற்கு ஆளும் கட்சியின் தலையீடுகள் உள்ளன. ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில், பொது விநியோக திட்டம் செயல்படும் விதம் பாராட்டத்தக்கது.
கோவா மாநிலத்தில் பெட்ரோல் மீது விதிக்கப்பட்ட வாட் வரி 20 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு லிட்டர் 1க்கு ரூ. 11 விலை குறைவு ஏற்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது பாஜக கோவா அரசாகும். மேலும் நிலக்கரித் துறையில் முறைகேடுகள் நடத்திய சுரங்க துறை நிர்வாக இயக்குநர் அரவிந்த லோயக்கர் பணி நீக்கம் செயப்பட்டதுடன், 144 வியாபாரிகளின் உரிமங்களும் ரத்து செயப்பட்டன. ஆனால் தமிழகத்தில், தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உடனடியான நடவடிக்கை எடுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வேண்டுமல்லவா? அதை முடிவு செயக் கூடிய தேர்தல், வர இருக்கும் தமிழக சட்ட மன்ற தேர்தல். டூ
தமிழகத்தின் தலைவிதி
எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. அது ஹிந்து விரோதப் போக்கு. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும், ஹிந்து விரோத போக்குடன், இஸ்லாமிய பயங்கரவாதத் தன்மைக்கு வக்காலத்து வாங்குவது அதிகரித்துள்ளது; இந்த அவலநிலையைப் போக்கவும் தமிழக வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியிடம் ஹிந்து வாக்காளர்கள் எதிர்பார்ப்பது…
பெருவாரியான ஹிந்துக்களின் உரிமைகள் தமிழகத்தில் பாதுகாக்கப்படவில்லை. 1967லிருந்து இன்று வரை ஹிந்து இயக்கங்களில் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை பயங்கரவாதிகளால் படுகொலை செயப்படுகிறார்கள். படுகொலை செதவர்கள் முஸ்லிம்கள் எனத் தெரிந்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இரண்டு கழகங்களும் தயக்கம் காட்டி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள், பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் போல் உள்ளன. சிறுபான்மையினர் மசூதிகள் அல்லது சர்ச்சுகள் கட்டிக் கொள்ளலாம், விதிமுறைகள் கிடையாது. ஆனால், பழைமை வாந்த ஹிந்துக் கோயில்களை நகர்ப்புற வளர்ச்சி என்ற பெயரில் இடிப்பதற்குக் கூட அரசு தயக்கம் காட்டுவதில்லை. கோயில் வருமானத்தை அரசு கடவுள் மறுப்பாளர்களின் பிறந்தநாளுக்கு அன்னதானம் வழங்க கோயில் பணத்தைச் செலவிடுவது தடுக்கப்பட வேண்டும். மசூதிகள், சர்ச்சுகளில் அரசு தலையிட மறுப்பது போல், ஹிந்துக் கோயில்களின் நிர்வாகத்திலும் தலையிடக் கூடாது என்பதைச் சட்டத்தின் மூலம் உறுதி செய வேண்டும். மகாராஷ்ட்ராவிலும் ஹரியானாவிலும் உள்ளது போல், ஹிந்துக்கள் தெவமாக வணங்கும் பசு மாட்டை கொல்லக் கூடாது, மாமிசத்தை விற்பனை செயக் கூடாது என்ற சட்டம், தமிழகத்திலும் கொண்டு வர வேண்டுமானால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்.