பாரத அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வை எழுதலாம். இவ்வாண்டு கொரோனா காரணமாக, மாணவர்கள் வீட்டில் இருந்தே இத்தேர்வை எழுதலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 30. இத்தேர்வு பாரதம் முழுவதும் வரும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 05 2021 ஆகிய இரு நாட்கள் இணையவழியில் நடைபெறும். ஸ்மார்ட் போன், கணினி மூலம் இத்தேர்வை எழுதலாம். தேர்வினை ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் எழுத இயலும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை எப்போது வேண்டுமென்றாலும் எழுதலாம். தேர்வுக் கட்டணம் ரூ. 100.
பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும், அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு ஆச்சர்யா பிரபுல்லா சந்திர ராய் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்தியாவின் சுதந்திர போராட்டம் மற்றும் அறிவியல் ஆகிய புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகளும், சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீத கேள்விகளும் ஆக மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். இதற்கான புத்தகங்களை vvm.org.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் இதற்கு பதிவு செய்ய www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கு, மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களுக்கும் ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும். படிப்புக்காக சிறந்த விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலும் கிடைக்கும்.
தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://youtu.be/Dei3esr2YEc / https://youtu.be/kaSqXRmvz3I / https://youtu.be/6NZRUf-usCg எனும் யூடியூப் வீடியோக்களை பார்க்கலாம். அல்லது www.vvm.org.in இணையதளத்தை அனுகலாம். அல்லது விஞ்ஞான் பாரதி அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் கோபால் பார்த்தசாரதி என்பவரை +91 80720 34441 என்ற அலைபேசியிலும் அழைத்து விவரங்கள் பெறலாம்.