காங்கிரசின் தேர்தல் அறிக்கை தேசத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் வாக்குறுதிகளைத் தருகிறது. இதை ராகுலின் தேச விரோத நண்பர்கள் தயாரித்திருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். என்ன ஆபத்து?
* நீட் தேர்வு ரத்து பற்றிய அறிவிப்பு பாரத தேசம் ஒரே தேசம் என்ற சிந்தனைக்கு மாற்றாகவும், தனியார் மருத்துவ கல்லூரிகள் கொள்ளையடிக்கும் விதமாகவும் அமைந்து விடும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப காங்கிரஸ் கட்சி ஆண்ட போது கொண்டு வரப்பட்டது நீட் தேர்வு. இப்போது அதை ரத்து செய்வார்களாம்! ஐந்தாண்டுகளாக நீட் தேர்வைப் பற்றி வாய் திறக்காத காங்கிரஸ், தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது, ஜெகத்தையும் பாரியை
யும் காப்பாற்ற தி.மு.க.வால் நிர்பந்திக்கப்பட்டது.
* பத்தாண்டு கால ஆட்சியில் கொண்டு வர முயற்சிக்காத பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறிப்பிட்டுள்ளது மக்களை ஏமாற்றும் செயலாகும். கட்சியில் முதலில் பெண்களுக்குரிய இடஒதுக்கீட்டை கொடுத்து விட்டுப் பேசலாம். ஆட்சி செய்த காலத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு லாலு
வும், முலாயமும், சரத்பவாரும் எதிர்ப்பு தெரிவித்த போது, அவர்களை ஒழுங்குப்படுத்தி கொண்டு வந்திருக்க வேண்டியவர்கள் ஆட்சி பறி போய்விடுமோ என்ற அச்சத்தில் வாய் திறக்காதவர்கள், இப்பொழுது கொண்டு வருவதாக கூறுவது ஏமாற்று வேலையாகும்.
* ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமுலில் உள்ள ராணுவத்திற்கு அதிகாரமளிக்கும் AFSPA சட்டம் ரத்து செய்யப்படுமாம்.