அறக்கட்டளைகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு

கடந்த 2020ம் நிதியாண்டு நிதிநிலை அறிவிப்பின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சமூக சேவையில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ), சந்தை மூலம் நிதி திரட்டும் வகையில் சமூகப் பங்கு வரித்தனை திட்டம் குறித்து அறிவித்தார். அதன்படி, லாப நோக்கற்ற சமூக சேவை நிறுவனங்களையும் பங்கு சந்தையில் பட்டியலிட முடியும். இதற்கான சட்ட திட்டங்களை உருவாக்க பங்கு சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது. இந்த தனிப் பிரிவில் லாப நோக்கற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் அந்த நிறுவனங்கள் நிதி திரட்டுவது எளிமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதில் செபியின் வரையறைக்கு உட்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் மட்டுமே சமூகப் பங்கு பரிவர்த்தனை பிரிவில் பதிவு செய்து கொள்ள முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களின் அறக்கட்டளைகள், அரசியல் மற்றும் மத நிறுவனங்கள், உள்கட்டமைப்பு நிறுவனங்கள் ஆகியவை இப்பிரிவில் இடம் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்கு சந்தையில் நிறுவனம் (என்.எஸ்.இ) அதன் தளத்தில் சமூக பங்கு பரிவர்த்தனைக்கென்று, தனிப் பிரிவை அறிமுகம் செய்ய செபி தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய தேசிய பங்கு சந்தை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ்குமார் சௌஹான், “சமூக பங்கு பரிவத்தனை பிரிவை அறிமுகப்படுத்த என்.எஸ்.இ அமைப்புக்கு செபி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து சமூக சேவை நிறுவனங்களிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளோம்” என கூறியுள்ளார்.