அரபி டிரைலர் வெளியீடு

தமிழக பா.ஜ.க. தலைவரும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை, முதல் முறையாக ‘அரபி’ என்கிற கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இரண்டு கைகளும் இல்லாத ஒரு வாலிபருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக அவர் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த டிரெய்லர்.