அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் 33 வது நாளாக நேற்று நடந்த விசாரணையின் போது முஸ்லீம் அமைப்புகள் சார்பில் ஆஜராக வழக்கறிஞர் மீனாட்சி அரோரா அயோத்தி பற்றி ஏஎஸ்ஐ அளிக்கும் அறிக்கையானது வெறும் கருத்து மட்டுமே இது அவர்களின் திட்டவட்டமான ஆய்வுகள் அல்ல.
ஆய்வு என கூறினால் அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். இந்த அறிக்கையை வெறுமனே ஆலோசனையாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர உறுதியான ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது,முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து நீதிபதி கூறியதாவது அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்து அங்கு கோவில் இருப்பதற்கான தடயங்கள் இருப்பதாக 2003 அளித்த அறிக்கை மிக முக்கியமானது இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவெனில் இதை வெறுமனா சாதாரண கருத்தாக கருத முடியாது. அகழ்வாராய்ச்சி செய்த பின்னரே அவர்கள் கண்டுபிடித்த விஷயங்களின் அடிப்படையில் அறிக்கை அளித்துள்ளனர் என்று அவர் திட்டவட்டமாக கூறினார் நீதிபதி
ReplyForward
|