காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவால
அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். இந்த தீர்ப்பு, கோயில் கட்டுவதற்கு அனுமதி கதவுகளை மட்டும் திறக்கவில்லை, பா.ஜ., மற்றும் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்த மற்றவர்களின் கதவுகளையும் மூடி உள்ளது.
டாக்டர் சுப்ரமண்யம் சுவாமி பா ஜ க மூத்ததலைவர்
ராமர் மட்டுமே மீண்டும் கோயில் கட்ட பச்சை விளக்கை எரிய விட்டுள்ளார். மீண்டும் கோயில் கட்டப்பட ராமர் விரும்பி உள்ளார். ஜெய் ஸ்ரீராம்.
உமாபாரதி முன்னாள் மத்திய அமைச்சர்
சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டப்படாத வரை இந்த பிரச்னை தீர்க்கப்படாது. ராமர் பிறந்த அயோத்தி மண்ணில் தினமும் கோடிக்கணக்கானவர்கள் வழிபட வேண்டும்.
நிதின் கட்கரி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்
அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். அமைதி காக்க வேண்டும்.
நிதிஷ் குமார் பீகார் முதல் அமைச்சர்
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அனைவரும் வரவேற்கக் கூடியது. இது சமூக நலனுக்கு பயனளிக்கும். இந்த விஷயத்தில் இனியும் பிரச்னை செய்யக் கூடாது என நான் கேட்டுக் கொள்கிறேன்.
பிரியங்கா காங்கிரஸ் பொதுச்செயலாளர்
அயோத்தி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த முடிவை மதித்து, அனைத்து தரப்பினரும், சமூகங்களும், குடிமக்களும் பல நூற்றாண்டுகள் பழமையான சமூகத்தின் நமது கலாச்சாரத்தை பராமரிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக பரஸ்பர நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பலப்படுத்த வேண்டும்.
ராஜ்நாத்சிங் ராணுவத்துறை அமைச்சர்
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. மக்கள் அமைதியும் பொறுமையும் காக்க வேண்டும் என
கேட்டுக் கொள்க
சன்னி வக்கப் வாரிய வழக்கறிஞர்
தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. தீர்ப்பு குறித்து ஆலோசனைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம். தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்
நடிகர் அனுபம் ஹெர்
அயோத்தி தீர்ப்பை வரவேற்கிறேன்.
ஹிந்து மஹா சபா வழக்கறிஞர் வரூண் குமார் சின்ஹா:
இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இந்த தீர்ப்பு மூலம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை கொடுத்துள்ளது.
வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர்
உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன். இதனால், நீண்ட காலமாக இருந்த பிரச்னையில் இருந்து, இரு சமுதாய மக்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுத்துள்ளது.
அமித்ஸா உள்துறை அமைச்சர்
ராம ஜென்ம பூமி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஒருமனதாக வரவேற்கிறேன். இந்த முடிவை அனைவரும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஒரே பாரதம்- வளமான பாரதம் என்பதில் இறுதியாக இருக்க வேண்டும் என அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களை சேர்ந்தவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
பல தசாப்தங்களாக நடந்து வரும் ராம ஜென்மபூமி தொடர்பான இந்த சட்ட தகறாரில் இன்று இந்த முடிவோடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் நீதித்துறை மற்றும் அனைத்து நீதிபதிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். சுப்ரீம் கோர்ட் அளித்த இந்த தீர்ப்பு மைல்கல் தீர்ப்பாக இருக்கும் என நம்புகிறேன். இந்த முடிவு இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சிறந்த கலாச்சாரத்திற்கு மேலும் பலம் தரும்.