நமது சமயத்தின் வேர் வேதத்தில் உள்ளது. இவை 4000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பாரபட்சமற்ற நம் ரிஷிகளால் எழுதப்பட்ட இந்த நூல்களுக்கு வேத அறிஞர்களால் எழுதப்பட்ட விளக்கங்களே தர்ம சாஸ்திரம். இவர்களும் விருப்பு வெறுப்பு அற்றவர்களே. தர்மத்தை பின்பற்றவேண்டியவன் அரசன். அந்த அரசன் பஞ்ச பூதங்களைப் போல் பாரபட்சம் இல்லாதவனாக இருத்தல் வேண்டும். நமது சமய இலக்கியங்கள் பொக்கிஷங்கள். அதில் பொய் உரைக்கவே வெள்ளையர்கள் சமஸ்கிருதமும் தமிழும் கற்றார்கள். எந்த மொழிக்கும் எழுத்து, சொல், பொருள் என்ற உண்டு. தைத்திரிய உபநிஷத்தில் இது கூறப்படுகிறது. இதை உணர்த்தும் விதமாகவே நம் முன்னோர்கள் அட்சராப்யாசம் செய்தனர். இந்த அட்சரங்கள் அகரத்தில் தொடங்கும். இதைதான் வள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று முதல் குறளிலே கூறினார். ‘மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ’ என்ற கருத்தே தமிழில் அன்னையும் ‘பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று உள்ளது. ‘சத்யம் வத தர்மம் சர’ இதையே தன் வாழ்நாளில் பின்பற்றிய அசோகச் சக்கரவர்த்தியும் இது வேதத்தில் நான் கண்டது எனக்கூறினார். அந்நாளில் கம்போடிய நாட்டை ஆண்ட மன்னர்கள் அயோத்தியை ராமர் ஆண்டது போல் இங்கு நாங்கள் ஆட்சி புரிவோம்” என்று உறுதி கூறுவார்கள்.
(திராவிட மாயை புத்தக ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான சுப்புவின் தமிழ் தமிழர் புத்தகம்.காம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ‘தமிழகம் – சமயமும் சரித்திரமும்’ என்ற தலைப்பில் பேசிய முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் நாகசாமி பேசியதிலிருந்து).