அமெரிக்காவின் மூக்குடைத்த ஜெய்சங்கர்

சில நாட்கள் முன்பு, உக்ரைன் போரால் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவிடம் இருந்து பாரதம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்தன. அதற்கு பதில் அளித்த பாரத வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இதற்கு நீங்கள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் ஐரோப்பிய நாடுகளைதான் முதலில் எச்சரிக்க வேண்டும். நாங்கள் மிகக்குறைந்த அளவே வாங்குகிறோம் என கூறி அவர்களின் வாயை அடைத்தார். வேறு வழியின்றி, கச்சா எண்ணைக்கு தடை விதிக்கப்படவில்லை. பாரதம் எண்ணைய் வாங்குவது அதன் உரிமை என அந்த நாடுகள் வழிக்கு வந்தன. இந்நிலையில், பாரதத்தில் சில மாநில அரசுகள், காவல்துறையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாதவும் அவற்றை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், பாரதத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் பல மனித உரிமைகள் பற்றி பாரதம் அறிந்துள்ளது, அதைபற்றி பாரதம் கவலைகள் கொண்டுள்ளது, அமெரிக்கா உட்பட பிற நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாரதமும் கூட தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளது என்று கூறினார்.