அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா நேற்று புறக்கணித்தார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மக்களவை நெறிமுறை குழுவின் விசாரணைக்கு பிறகு அவர்எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
லஞ்ச வழக்கில் அந்நியச் செலாவணி சட்ட விதிமீறல் தொடர்பாக மார்ச் 28-ம் தேதிவிசாரணைக்கு ஆஜராகும்படி தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி மற்றும் மஹுவாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை மஹுவா மொய்த்ரா நேற்று புறக்கணித்தார். இது தொடர்பான கேள்விக்கு,மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தான் போட்டியிடும் கிருஷ்ணாநகர் தொகுதிக்கு செல்வதாக அவர் கூறினார். அமலாக்கத் துறை சம்மனை மஹுவா மொய்த்ரா ஏற்கெனவே 2 முறை புறக்கணித்துள்ளார்.