அப்பாவிகளை கொல்லும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்றுள்ளனர். இதனை ஆப்கன் உள்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உத்தரவின்படியே இவை நடைபெறுகிறது, தலிபான் பயங்கரவாதிகள் பொதுமக்களின் வீடுகள், நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அழிக்கின்றனர், அரசு அலுவலகங்களை கொள்ளையடிக்கின்றனர். ஸ்பின் போல்டாக் மைதானங்களில் அடக்கம் செய்ய வழியின்றி இறந்த உடல்கள் இன்னமும் பரவியுள்ளன என ஆப்கன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், காந்தஹாரில் தலிபான் பயங்கரவாதிகளின் முன்னேற்றத்தை தடுக்க அமெரிக்க ராணுவம் சில தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த முப்பது நாட்களில் ஏழு தாக்குதல்களை நடத்தியுள்ளது. பெரும்பாலான தக்குதல்கள் டிரோன் வழியே மேற்கொள்ளப்படுகின்றன என பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.